உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

காலிறுதியில் ரைபாகினா, பெகுலா

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா, அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். 

Published On :7 பிப்ரவரி 2024, 8:51 pm IST

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா, அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.


மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரைபாகினா 6-3, 7-5 என்ற செட்களில் ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸாவை சாய்த்தார். காலிறுதியில் அவர், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை எதிர்கொள்கிறார். 

முன்னதாக அலெக்ஸாண்ட்ரோவாவிடம் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் தோற்றார், 8-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் வெரோனிகா குதர்மிடோவா. 2-ஆம் இடத்திலிருக்கும் பெகுலா 4-6, 6-2, 6-3 என்ற செட்களில் சக அமெரிக்கரான பெர்னார்டா பெராவை வீழ்த்தினார். 

ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவா 2-6, 6-3, 6-2 என்ற செட்களில் செக் குடியரசின் காட்டெரினா சினியாகோவாவை வெளியேற்றினார். இதையடுத்து, காலிறுதியில் பெகுலா - அனஸ்தாசியா சந்திக்கின்றனர். 

இதர ஆட்டங்களில் ரஷியாவின் டரியா கசாட்கினா 5-7, 6-4, 7-5 என சக நாட்டவரான அனா கலின்ஸ்கயாவையும், 6-ஆம் இடத்திலிருக்கும் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-4, 5-7, 6-4 என பிரான்ஸின் கரோலின் கார்சியாவையும் வென்றனர். காலிறுதியில் கசாட்கினா - ஜெர்மனியின் லாரா சிக்மண்டையும், ஆஸ்டபென்கோ - உக்ரைனின் மார்தா கொஸ்டியுக்கையும் எதிர்கொள்கின்றனர். 

டாமி, நிகோலா முன்னேற்றம்: ஆடவர் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-3, 6-2 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற, 2-ஆம் இடத்திலிருக்கும் சிலியின் நிகோலா ஜேரி 6-7 (5/7), 7-6 (9/7), 6-4 என்ற கணக்கில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை வென்றார். 

காலிறுதியில், டாமி - பிரிட்டனின் ஜேக் டிரேப்பருடனும், ஜேரி - செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவுடனும் மோதுகின்றனர். 3-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 6-4, 7-6 (12/10) என்ற செட்களில் இத்தாலியின் லொரென்úஸா சொனிகோவை தோற்கடித்தார். 

4-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்úஸா முசெட்டி 6-4, 6-1 என ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை வென்றார். அடுத்த சுற்றில், முசெட்டி - கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்லிக்கையும், கோர்டா - ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் கானெலையும் சந்திக்கின்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் இணை காலிறுதிக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.