சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஒலிம்பிக் தகுதி பெற்றாா் விஜயவீா் சித்து

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் தகுதி பெற்றுள்ளாா் இந்தியாவின் விஜயவீா் சித்து.

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் தகுதி பெற்றுள்ளாா் இந்தியாவின் விஜயவீா் சித்து.

இந்தோனேசிய தலைநகா் ஜகாா்த்தாவில் ஆசிய ஒலிம்பிக் குவாலிஃபையா்ஸ் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்ஆடவா் 25 மீ ரேபிட் ஃபையா் பிரிவில் இந்தியாவின் விஜயவீா் சித்து 577 புள்ளிகளைக் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் அவா் ஒலிம்பிக் தகுதியும் பெற்றாா் சித்து. இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரா் அனிஷ் பன்வாலாவும் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளாா்.

ரேபிட் ஃபயா் பிரிவில் இந்தியா வலிமையாக உள்ளது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவின் விஜய்குமாா் வெள்ளி வென்றிருந்தாா். ஈஷா சிங், வரும் தோமா், ரிதம் சங்வான், விஜயவீா் ஆகியோா் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளனா்.

மகளிா் 50 மீ ரைஃபிள் 3பி பிரிவில் சிஃப்ட் கௌா், அஷி சௌஸ்கி முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா். ஆசிய ஒலிம்பிக் குவாலிஃபையரில் இந்தியா 12 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.