சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஃபிரி கிக்கில் அதிக கோல்கள்: இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய மெஸ்ஸி!

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஃபிரி கிக்கில் கோல் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது குறித்து...

Inter Miami forward Lionel Messi reacts after scoring his side's second goal during the first half of an MLS soccer match against CF Montreal, Saturday, Aug. 29, 2026, in Miami. (AP Photo/Rebecca Blackwell)

கோல் அடித்த மகிழ்ச்சியில் லியோ மெஸ்ஸி. - படம்: ஏபி

Published On :4 வினாடிகள் முன்பு

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (39 வயது) ஃபிரி கிக்கில் கோல் அடித்தவர்கள் பட்டியலில் 74 கோல்களுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் (39 வயது) அபாரமான ஆட்டத்தினால் இன்டர் மியாமி அணி 7-1 என மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி 40, 52, 83, 90+6ஆகிய நிமிஷங்களில் கோல் அடித்து மிரட்டினார். அத்துடன் 80ஆவது நிமிஷத்தில் லூயிஸ் சௌரஸுக்கு மெஸ்ஸி ஒரு அசிஸ்ட் செய்தும் அசத்தினார்.

இந்த நான்கு கோல்களில் இரண்டு கோல்கள் ஃபிரி கிக் மூலம் அடித்தார். அதிலும் 90+6ஆவது நிமிஷத்தில் அடித்த அந்த ஃபிரி கிக் கோல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்னாள் பிரேசில் வீரர் மார்செலினோ கரியோகா 78 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். லியோனல் மெஸ்ஸி இன்னும் 5 ஃபிரி கிக் கோல் அடித்தால் முதலிடத்தைப் பிடிப்பார்.

தற்போது ஓய்வு பெறாமல் விளையாடும் வீரர்களில் மெஸ்ஸி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்டியானோ ரொனால்டோ 63 கோல்களுடன் இந்தப் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறார்.

ஃபிரி கிக்கில் அதிக கோல்கள் அடித்தவர்கள்

1. மார்செலினோ கரியோகா - 78

2. லியோனல் மெஸ்ஸி - 74*

3. ஜாயிர் டா ரோசா பின்டோ - 74

4. ராபர்ட்டோ டைனமைட் - 73

5. ஜுனினோ பெர்னம்புகானோ - 72

6. மார்கோஸ் அசுன்சாவ் - 68

7. சினிசா மிஹைலோவிச் - 67

8. ஜார்ஜ் அரவேனா - 65

9. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 63*

10. ஜிகோ - 62

11. தியாகோ மாரடோனா - 61

Summary

Most goals from free-kicks: Messi moves up to second place!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.