மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

கால்கள் சோர்வடைந்து விட்டன... தந்தையின் இறப்புக்கு மெஸ்ஸி உருக்கம்!

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி அவரது தந்தை இறப்பு குறித்து எழுதிய நீண்ட பதிவு குறித்து...

News image

தந்தையுடன் லியோனல் மெஸ்ஸி. - படம்: இன்ஸ்டா / லியோனல் மெஸ்ஸி.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:59 pm IST

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (39 வயது) அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி (68 வயது) இறப்பு குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான நீண்ட பதிவை எழுதியுள்ளார்.

கால்பந்து உலகக் கோப்பை சமயத்தில் இருந்தே உடல் நலத்தில் குன்றியிருந்த மெஸ்ஸியின் தந்தை கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் அமெரிக்காவில் இருந்த மெஸ்ஸி ஆர்ஜென்டீனாவுக்குச் சென்றார்.

சில காலம் கால்பந்து விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், நான்காவது நாளே மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பி முக்கியமான லீக்ஸ் கோப்பையில் பங்கேற்றார். இருப்பினும் அந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி தோல்வியுற்றது.

இந்தப் போட்டிக்கு முன்பாக லியோனல் மெஸ்ஸி தனது இன்ஸ்டா பக்கத்தில் தந்தையின் இறப்பு குறித்து உருக்கமாக கூறியிருப்பதாவது:

தந்தையே, நீங்கள் இறந்துவிட்டதை என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை. இதனை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நான் அதில் மூழ்க விரும்பவில்லை. கடைசியாக உங்களது உடல்நிலை மோசமாவதற்கு முன்பாக, நீங்கள் என்னை இந்த உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென கேட்டுக்கொண்டே இருந்தீர்கள்.

முதல்முறையாக நீங்கள் உலகக் கோப்பையைப் பார்க்க வரவில்லை. ஆனால், நீங்கள் சரியாகி வருவதாக அம்மா கூறினார். நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம்; நீங்கள் போட்டியைப் பார்க்க வருவீர்கள் என முன்பே உங்களிடம் சொல்லியிருந்தேன்.

ஒவ்வொரு முறையும் போட்டி முடிந்த பிறகு உங்களது குறுஞ்செய்திக்காக காத்திருப்பேன். அப்போதுதான் உங்களது மோசமான நிலைமை குறித்த உண்மையை உணர்ந்தேன். அப்படி இருந்தும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் நீங்கள் போட்டியைக் காண வேண்டுமென தொடர்ச்சியாக நினைத்துக்கொண்டே இருப்பேன்.

இறுதிப் போட்டியில் வென்று, மற்றுமொரு உலகக் கோப்பையை உங்களிடம் காட்ட விரும்பினேன். என்னால் முடியவில்லை; எனது கால்கள் சோர்வடைந்து விட்டன. இந்தமுறை எனது உடலுக்கு எதிராகவே விளையாடினேன். ஆனால், என்னால் முடியவில்லை, முழுமையான உடல் நலத்துடன் உணர முடியவில்லை.

நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்யவதென எனக்குத் தெரியவில்லை; எப்படி முன்னோக்கிச் செல்வதெனவும் தெரியவில்லை. நான் கால்பந்து மட்டுமே விளையாடினேன். இனிமேல் இதைத் தொடர்வதா அல்லது விடுவதா என்ற குழப்பம் இருக்கிறது.

தொடக்கத்தில் இருந்தே நீங்கள் என் பக்கம் இருந்துள்ளீர்கள். கடைசிக்கு முன்பாக சிறிது மிச்சமிருக்கிறது. ஏன் இன்னும் கொஞ்சம் நாள்கள் உடன் இருக்கவில்லை? நாம் இருவருமே ஒன்றாக முடித்திருக்கலாமே?

நீங்கள் தந்தையாக நண்பனாக முகவராக இருந்தீர்கள். தேவைப்படும்போதெல்லாம் உடன் இருந்தீர்கள். நீங்கள் எப்போதுமே தவறு செய்ததில்லை. சில வாக்குவாதங்களைத் தவிர்த்து நீங்கள் எப்போதுமே சரியாகவே இருப்பீர்கள். கடைசியில் எல்லாமே நீங்கள் சொன்னதுபோலவே நடக்கும்.

உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். ஆனால், நீங்கள் எப்போதும் என்னுடனே இருப்பீர்கள். குறிப்பாக நான் எனது பிள்ளைகளை வளர்க்கும் விதம் நீங்கள் என்னை வளர்த்தது போலவே இருக்கும் என்றார்.

இந்தப் பதிவுக்கு நெய்மர், ரொனால்டோ என பல ஜாம்பவான்களும் கமெண்ட் செய்துள்ளனர். குறுஞ்செய்திகள் மூலமாக அன்பையும் ஆறுதலையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என மெஸ்ஸி கூறியுள்ளார்.

Summary

Lionel Messi’s emotional tribute to his late father reveals his doubts about his future on the pitch

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.