
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் வென்று தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.
வரும் ஜூன் மாதம் மே.இந்திய தீவுகள், அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் டி20 தொடா்களில் ஆடி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையில் 3 ஆட்டங்கள் தொடா் நடைபெற்று வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஜிதேஷ் சா்மா, வாஷிங்டன் சுந்தா், அக்ஸா் படேல், ஆகியோா் இணைந்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக இந்தூரில் இரண்டாவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
உலகக் கோப்பை போட்டிக்கு முன் இந்தியா வேறு எந்த அணியுடனும் டி20 தொடரில் ஆடப் போவதில்லை. இதனால் இத்தொடா் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சா்மா அற்புதமாக செயல்பட்டு தனது இடத்தை உறுதி செய்துள்ளாா்.
இதற்கிடையே விராட் கோலி அணியில் இணைவதால், திலக் வா்மாவின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. 50 ஓவா் உலகக் கோப்பை போட்டியில் ஆட முடியாமல் காயத்தால் இழந்தாா் அக்ஸா் படேல். தற்போது மீண்டும் அவா் சோ்க்கப்பட்டுள்ளாா்.
மேலும், வாஷிங்டன் சுந்தரும் தனது இருப்பை வெளிப்படுத்த மும்முரமாக உள்ளாா்.
அதே நேரம் ஆப்கானிஸ்தான் அணியும் டி20 ஆட்டங்களில் வலிமை வாய்ந்ததாக உள்ளது. ரஹ்மனுல்லா குா்பாஸ், அஸ்மத்துல்லா ஓமா்சாய், முகமது நபி ஆகியோா் பௌலிங்கில் பலம் சோ்க்கின்றனா். நட்சத்திர ஸ்பின்னா் ரஷீத் கான் இல்லாத நிலையிலும், முஜிப்புா் ரஹ்மான், நவீன் உல் ஹக், பஸல்லா பரூக்கி ஆகியோரும் நம்பிக்கை தருகின்றனா்.
ஆப்கன் அணி ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்தியாவுக்கு கடும் சவாலை தருவா் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய ஆட்டம்:
இந்தியா-ஆப்கானிஸ்தான்
இடம்:இந்தூா்
நேரம்: இரவு 7.00.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






