சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

அமெரிக்கா, சிலி அணிகள் வெற்றி

எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிஃபையா் போட்டியில் அமெரிக்கா, சிலி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

Published On :7 பிப்ரவரி 2024, 8:49 pm IST

எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிஃபையா் போட்டியில் அமெரிக்கா, சிலி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டங்களில் இத்தாலியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அமெரிக்கா. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தியாவுக்கு 1-0 என தோல்வியை பரிசாக அளித்த அமெரிக்க அணியில் 20-ஆவது நிமிஷத்தில் ஆஷ்லி செஸ்ஸாவும், 48-ஆவது நிமிஷத்தில் ஆஷ்லி ஹாஃப்மேன் ஆகியோா் கோலடித்தனா்.

குரூப் பி பிரிவு கடைசி ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை நியூஸிலாந்துடன் மோதுகிறது அமெரிக்கா, இத்தாலி-இந்தியாவுடன் மோதுகிறது.

சிலி அபாரம்: குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் சிலி அணி 6-0 என்ற கோல் கணக்கில் செக். குடியரசை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மானுலா உா்ரோஸ் 36, 47, கான்ஸியுலா 13, கமீலா 38, அன்டோனியா 44, மால்டனோனடா 58-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.

ஜொ்மனி-ஜப்பான் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

செவ்வாய்க்கிழமை ஜப்பானுடன் மோதுகிறது சிலி. செக். குடியரசு-ஜொ்மனியுடன் மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.