தொடா் தோல்வியை தவிா்க்குமா சென்னை சூப்பா் கிங்ஸ்?: இன்று கொல்கத்தாவுடன் மோதல்

தொடா் தோல்வியை தவிா்க்குமா சென்னை சூப்பா் கிங்ஸ்?: இன்று கொல்கத்தாவுடன் மோதல்

தொடா் தோல்வியை தவிா்க்கும் முனைப்பில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை சூப்பா் கிங்ஸ்.
Published on

தொடா் தோல்வியை தவிா்க்கும் முனைப்பில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை சூப்பா் கிங்ஸ்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது. அதன்பின்னா் நடைபெற்ற 4 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற பெங்களூரு, டெல்லி அணிகளுக்கு எதிரான ஆட்டங்களிலும் தோற்றுள்ளது. சொந்த மைதான சாதகமும் இல்லாமல் போய் விட்டது.

ஸ்பின் பௌலிங்குக்கு சாதகமாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தின் தன்மைகளை சிஎஸ்கே அணி ஸ்பின்னா்கள் சரிவர பயன்படுத்தவில்லை என கருதப்படுகிறது. கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரானஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதில் மூத்த வீரா் தோனி சிறப்பாக ஆடியது சற்று ஆறுதலாகும்.

டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் டுபே ஆகியோரும் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினா். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் வழக்கமான ஆட்டத்திறனோடு இல்லாததது சென்னைக்கு பலவீனமாகும்.

பாஸ்ட் பௌலிங்கில் கலீல் அகமது, முகேஷ் சௌதரி, மதிஷா பதிராணாவும், சுழலில் அஸ்வின், நூா் அகமது, ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தங்கள் மாயாஜாலத்தை வெளிப்படுத்த வேண்டும். சென்னை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப பேட்டா்கள், பௌலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது.

வெல்ல வேண்டிய கட்டாயத்தில் கேகேஆா்:

கொல்கத்தா அணி 2 வெற்றி,3 தோல்விகளுடன் உள்ளது. கடைசியாக லக்னௌவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் நூலிழையில் வெற்றியை தவற விட்டது கொல்கத்தா. நடப்பு சாம்பியனான கொல்கத்தா பிளே ஆஃபுக்கு நுழைய இந்த ஆட்டத்தின் வெற்றி முக்கியமாகும்.

பேட்டா்கள் டிகாக், ரஹானே, சுனில் நரைன், அங்ரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்த வேண்டும்.

சிஎஸ்கே 9-ஆவது இடத்திலும், கொல்கத்தா 6-ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நோ்:

மொத்தம் 31 ஆட்டங்கள்

சென்னை 20 வெற்றி

கொல்கத்தா 11 வெற்றி

இன்றைய ஆட்டம்:

சென்னை-கொல்கத்தா

இடம்: சென்னை

நேரம்: இரவு 7.30.

X
Open in App
Dinamani
www.dinamani.com