2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்ஸுக்கு 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது என மகிழ்ச்சியான செய்து கிடைத்துள்ளது.
ஐசிசியில் முழுநேர உறுப்பினராக 12 அணிகள் இருக்கும் நிலையில் இதில் வெறுமனே 6 அணிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள், பெண்கள் பிரிவில் 6 அணிகள் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக்ஸ் 2028: டி20 வடிவில் கிரிக்கெட்
டி20 வடிவில் நடைபெறும் இதில் ஒவ்வொரு அணியிலும் 15 பேர் தேர்வுசெய்யப்பட்டு மொத்தமாக 90 பேர்கள் ஒலிம்பிக்ஸுக்கு தேர்வாக இருக்கிறார்கள்.
ஒலிம்பிக்ஸை நடத்தும் அமெரிக்க அணி தானாகவே தேர்வானதால் மீதமுள்ள 5 அணிகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
இந்த அணிகள் தேர்வு முறைகள் குறித்து தற்போது எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 1,900ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் நடைபெற்றது. அது இரண்டுநாள் போட்டியாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!

வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக தமிம் இக்பால் நியமனம்!

கங்குலி பயோபிக் படப்பிடிப்பு துவக்கம்!

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்கும் கர்நாடக கிரிக்கெட் சங்கம்!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


