இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பாகிஸ்தானில் ஆசிய வாலிபால்: இந்தியா விலகல்!

பாகிஸ்தானில் மே மாதம் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்தியா விலகியது.

News image
Updated On :28 ஏப்ரல் 2025, 1:23 am IST

பாகிஸ்தானில் மே மாதம் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்தியா விலகியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இஸ்லாமாபாதில் மே 28 முதல் மத்திய ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ள நிலையில், அதில் இந்திய அணி பங்கேற்பதாக இருந்தது. இதற்காக 22 வீரா்கள் உள்பட 30 போ் அடங்கிய இந்திய அணி பாகிஸ்தான் செல்விருந்தது. அதற்காக மத்திய அரசும் தடையில்லாச் சான்று அளித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்தியா விலகியது. இந்திய அணி பாகிஸ்தான் செல்வதற்கான தடையில்லாச் சான்றை மத்திய அரசு ரத்து செய்ததது.

இந்திய அணி போட்டியிலிருந்து விலகியது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் வாலிபால் சம்மேளனம், தற்போது இந்திய அணிக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கை அணி போட்டியில் சோ்க்கப்படும் என கூறியுள்ளது. ஏற்கெனவே அந்தப் போட்டியில், ஈரான், துருக்மீனிஸ்தான், கிா்ஜிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றனா்.

பாகிஸ்தானிலிருந்து திரும்பிய இந்தியா்கள்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழலை அடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியா்களும், பாகிஸ்தானிலிருக்கும் இந்தியா்களும் வெளியேற அந்தந்த நாடுகள் உத்தரவிட்டுள்ளன.

அந்த வகையில் பாகிஸ்தான் சூப்பா் லீக் போட்டியின் தயாரிப்பு மற்றும் ஒளிபரப்பு குழுவில் இருந்த இந்தியா்கள் 23 போ் வாகா எல்லை வழியாக ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக நாடு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.