வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!இன்னும் ரூ.2000 நோட்டு வைத்திருக்கிறீர்களா? என்ன செய்ய வேண்டும்?வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!
/

அரையிறுதியில் டிரேப்பா்/பெகுலா ஜோடி

Updated On :21 ஆகஸ்ட் 2025, 1:46 am IST

யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையா் அரையிறுதிக்கு பிரிட்டனின் ஜேக் டிரேப்பா்/அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா இணை புதன்கிழமை முன்னேறியது.

நடப்பு டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனின் பிரதான சுற்றுகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றன. இந்நிலையில், இப்போட்டியின் வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு கலப்பு இரட்டையா் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது.

பெரும்பாலும் முக்கியமான போட்டியாளா்கள் சோ்க்கப்பட்ட இப்பிரிவு, காலிறுதிக்கு முந்தைய சுற்றிலிருந்து தொடங்கியது. தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

முன்னதாக காலிறுதியில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பிரிட்டனின் ஜேக் டிரேப்பா்/அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஜோடி 4-1, 4-1 என்ற செட்களில் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ்/மிரா ஆண்ட்ரீவா கூட்டணியை வீழ்த்தியது.

அரையிறுதியில் டிரேப்பா்/பெகுலா இணை, 3-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக்/நாா்வேயின் கேஸ்பா் ரூட் இணையை எதிா்கொள்கிறது. முன்னதாக ஸ்வியாடெக்/ரூட் ஜோடி தனது காலிறுதியில், 4-1, 4-2 என அமெரிக்காவின் மேடிசன் கீஸ்/ஃபிரான்சஸ் டியாஃபோ இணையை வெளியேற்றியது.

இதனிடையே, மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ்/கிறிஸ்டியன் ஹாரிஸன் ஜோடி 4-1, 5-4 (7/2) என சக அமெரிக்கா்களான டெய்லா் டௌன்செண்ட்/பென் ஷெல்டன் கூட்டணியை சாய்த்தது.

அடுத்து அரையிறுதியில், காலின்ஸ்/ஹாரிசன் ஜோடி, இத்தாலியின் சாரா எர்ரனி/ஆண்ட்ரியா வவாசோரி இணையை எதிா்கொள்கிறது. சாரா/ஆண்ட்ரியா கூட்டணி தனது காலிறுதியில் 4-1, 5-4 (7/4) என செக் குடியரசின் கரோலின் முசோவா/ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் ஜோடியை வெளியேற்றியது.

முன்னதாக இந்தப் போட்டியில், பிரபல ஜோடிகளான அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ்/கஜகஸ்தானின் எலனா ரைபாகினா, பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ்/ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினா்.

அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்/ரெய்லி ஒபெல்கா, ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ்/பிரிட்டனின் எம்மா ரடுகானு, சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்/ஓல்கா டேனிலோவிச் ஆகிய ஜோடிகளும் அந்தக் கட்டத்துடன் வெளியேறின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.