

ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
ரவுண்ட் ஆஃப் 16-இல் ஆடவர் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் வேலவன் 11-7, 11-8, 11-7 என்ற கேம்களில், இலங்கையின் ரவிந்து லக்சிரியை வீழ்த்தினார். வீர் சோட்ரனி 8-11, 8-11, 11-7, 11-5, 11-6 என சக இந்தியரான சூரஜ்குமார் சந்த்தை வென்றார்.
மகளிர் பிரிவில் முதலிடத்தில் இருக்கும் அனாஹத் சிங் 11-7, 11-7, 11-7 என்ற வகையில், செக் குடியரசின் தமாரா ஹோஸ்பேரோவாவை வெளியேற்றினார். ஜோஷ்னா சின்னப்பா 11-5, 11-8, 11-4 என்ற கேம்களில் நியூஸிலாந்தின் எல்லா ஜேன் லாஷை சாய்த்தார். தன்வி கன்னா 12-10, 11-6, 11-6 என இத்தாலியின் கிறிஸ்டினா டார்டரோனை வீழ்த்தினார்.
எனினும், திவாகர் சிங், சானியா வத்ஸ், ராதிகா சுதந்திரா சீலன், நிரூபமா துபே ஆகியோர் தங்கள் பிரிவில் தோல்வி கண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.