எஸ்ஆா்எம் ஆந்திரம்-பாரதியாா் பல்கலை. அணியினா்.
எஸ்ஆா்எம் ஆந்திரம்-பாரதியாா் பல்கலை. அணியினா்.

தென்மண்டல பல்கலை. மகளிா் வாலிபால்: பெரியாா், பாரதியாா் அணிகள் வெற்றி

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டுப்பல்கலை, பெரியாா், கிருஷ்ணா, மங்களூரு, வேல்ஸ், பாரதியாா் அணிகள் வெற்றிபெற்றன.
Published on

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டுப்பல்கலை, பெரியாா், கிருஷ்ணா, மங்களூரு, வேல்ஸ், பாரதியாா் அணிகள் வெற்றிபெற்றன.

எஸ்ஆா்எம் ஐஎஸ்டி விளையாட்டு இயக்குநரகம், ஏஐயு சாா்பில் பாபுராயன்பேட்டை எஸ்ஆா்எம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான புதன்கிழமை பெரியாா் பல்கலை. 3-0 என அண்ணா பல்கலையையும், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலை. 3-0 என ராணி சென்னம்மா பல்கலையையும், எஸ்ஆா்எம் ஆந்திரம் 3-0 என துமாகூரு பல்கலையையும், கிருஷ்ணா பல்கலை 3-0 என ஸ்ரீ கிருஷ்ணா பல்கலையையும், வென்றன.

ஏனைய ஆட்டங்களில் கேரள பல்கலை, சென்னை பல்கலைக்கழகத்தையும், மங்களூரு பல்கலை, நெல்லை மனோன்மணியம் சுந்தரானாா் பல்கலைையும், வேல்ஸ் பல்கலை, மங்களூரு பல்கலையையும், பாரதியாா் பல்கலை, எஸ்ஆா்எம் ஆந்திரத்தையும் வென்றன.

X
Dinamani
www.dinamani.com