முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கால்பந்து பிரபலங்கள் மூவர் பிறந்தநாள்..! ஃபிபாவின் நாட்டு நாட்டு போஸ்டருக்கு ஜூனியர் என்டிஆர் பதில்!

பிறந்தநாள் கொண்டாடும் கால்பந்து பிரபலங்கள் மூவருக்கு ஃபிபா ஆர்ஆர்ஆர் பட பாணியில் போஸ்டர் வெளியீடு.

கால்பந்து பிரபலங்கள் மூவர் பிறந்தநாளுக்கு ஜூனியர் என்டிஆர் பதில். - படம்: இன்ஸ்டா / ஃபிபா

Published On :

பிறந்தநாள் கொண்டாடும் கால்பந்து பிரபலங்கள் மூவருக்கு ஃபிபா ஆர்ஆர்ஆர் பட பாணியில் போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதற்கு ஜூனியர் என்டிஆர் பதில் அளித்ததும் வைரலாகி வருகிறது.

ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ஜூனியர் என்டிஆர் உலகம் முழுவதும் புகழ்பெற்றார்.

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலை மையமாக வைத்து இன்று பிறந்தநாள் கொண்டாடும் 3 கால்பந்து பிரபலங்களான நெய்மர், டெவெஸ், ரொனால்டோவின் முதல் ஆங்கில எழுத்துகளை இணைத்து என்டிஆர் என ஆர்ஆர்ஆர் பட பாணியில் போஸ்டர் வெளியிட்டுள்ளது.

இந்தப் போஸ்டர் இன்ஸ்டாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.

40 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் தலைசிறந்த ஒருவராக அறியப்படுகிறார். நவீனகால கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவராக சாதனை படைத்துள்ளார்.

33 வயதாகும் பிரேசிலைச் சேர்ந்த மற்றுமொரு தலைசிறந்த வீரர் நெய்மர் கால்பந்து உலகின் முடிசூடா இளவரசன் என ரசிகர்களால் செல்லமால அழைக்கப்படுகிறார்.

முன்னாள் கால்பந்து வீரரும் ஆர்ஜென்டீனாவின் மேலாளருமான 41 வயதாகும் கார்லோஸ் ஆல்பர்டோ டெவெஸ் பிறந்தநாளும் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதிவுக்கு ஜூனியர் என்டிஆர், “ஹா ஹா ஹா... பிறந்தநாள் வாழ்த்துகள் நெய்மர்... டெவெஸ்... ரொனால்டோ...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கமெண்ட்டுக்கு சுமார் 40 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளது.

ஜூனியர் என்டிஆர் கமெண்ட்.

ஜூனியர் என்டிஆர் கமெண்ட்.

கடைசியாக ஜூனியர் என்டிஆர் தேவரா -1 படத்தில் நடித்திருந்தார். சுமார் 300 கோடொயை வசூலித்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் உடன் முதல்முறையாக வார் 2 என்றப் படத்தின் மூலமாக அறிமுகமாகவிருக்கிறார். ஆக.14ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.