பார்சிலோனாவின் வைரம் பெட்ரிக்கு 2030 வரை ஒப்பந்தம் நீட்டிப்பு..! யாரெல்லாம் தக்கவைப்பு?

பிரபல கால்பந்து அணியான பார்சிலோனாவில் பெட்ரியின் ஒப்பந்தம் 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெட்ரி
பெட்ரிபடங்கள்: எக்ஸ் / எப்ஃசி பார்சிலோனா
Published on
Updated on
1 min read

பிரபல கால்பந்து அணியான பார்சிலோனாவில் பெட்ரியின் ஒப்பந்தம் 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மிட்ஃபீல்டராக இருக்கும் பெட்ரோ கொன்சாலே பெட்ரி ஜூன் 30, 2030 வரை பார்சிலோனா அணியில் நீடிப்பாரென அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்சிலோ அணியின் தலைவர் ஜான் லபோர்டா முன்னிலையில் பெட்ரி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பார்சிலோனாவின் அட்டாக்கிங் ட்ரையோவான ரபினா, லெவண்டாவ்ஸ்கி, லாமின் யாமல் ஆகியோருக்கு கோல் அடிக்க மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார் பெட்ரி.

2019இல் பார்சிலோனா அணிக்கு வந்தார். தன்னுடைய 17 வயதில் இருந்து இந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

32 போட்டிகளில் பார்சிலோனா அணி 101 கோல்கள் அடித்து அசத்தியுள்ளது.

லா லிகா, சாம்பியன் லீக் இரண்டிலும் பார்சிலோனா அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்படும் பெட்ரிக்கு தற்போது 22 வயதாகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவரது ஆட்ட நுணுக்கம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முக்கியம் வீரர்களான யாமின் லாமல் 2026, லெவண்டாவ்ஸ்கி 2026, ரபினா 2027இல் ஒப்பந்தம் முடிவடைய இருக்கிறது.

தக்கவைக்கப்பட்ட மற்ற வீரர்கள் பட்டியல்

ரொனால்டு அரோஜா - 2031 வரை

டேனி ஓல்மா - 2030 வரை

பெர்மின் லோப்ஸ் - 2029 வரை

மார்க் கசோடா - 2028 வரை

ஜெரார்ட் மார்டின் - 2028 வரை

பாவ் விக்டர் - 2029 வரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X