~
~

உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

இந்தியாவின் ஹிதேஷ் குலியா, சாக்ஷி ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.
Published on

கஜகஸ்தான் தலைநகா் அஸ்டானாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, சாக்ஷி ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

பாக்ஸிங் வோ்ல்ட் சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் 70 கிலோ காலிறுதியில் ஹிதேஷ் குலியா 5-0 என கஜகஸ்தானின் அல்மாஸ் ஒரஸ்பெகோவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

மகளிா் 54 கிலோ பிரிவில் சாக்ஷி அபாரமாக ஆடி பிரேஸிலின் டாட்டியனா ரெஜினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா்.

மினாட்சி 48, பூஜா ராணி 80, சஞ்சு 60 கிலோ பிரிவுகளில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனா். 51 கிலோ பிரிவில் அனாமிகா காலிறுதியில் ஆட உள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com