
செஸ் வீரர் குகேஷின் முன்னோக்கியப் பயணம் வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் தொடர் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியா சார்பில் டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியின் ஆறாவது சுற்றில், 5 முறை உலக சாம்பியனான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்செனை குகேஷ் எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய மேக்னஸை சாமர்த்தியமாக விளையாடி வீழ்த்திய குகேஷ் வெற்றியைப் பதிவு செய்தார். இந்தத் தோல்வியால் மேஜையைத் தட்டி தனது அதிருப்தியை மேக்னஸ் வெளிப்படுத்தினார்.
இந்த நிலை குகேஷைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “குகேஷின் வியத்தகு சாதனை! மிகச் சிறந்த வெற்றியைப் பெற்ற அவருக்கு வாழ்த்துகள்.
நார்வே செஸ் தொடரின் 6 வது சுற்றில் முதல் முறையாக மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய அவரின் அர்ப்பணிப்பு மற்றும் புத்திசாலித்தனத்துக்கு பாராட்டுக்கள். அவரின் முன்னோக்கிய அவரின் வெற்றிப் பயணத்துக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.