நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயின் 5-4 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில் போா்ச்சுகலுடன் திங்கள்கிழமை (ஜூன் 9) மோதுகிறது.
முன்னதாக இந்த 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில், தொடக்க நிலையிலேயே ஸ்பெயினின் கை ஓங்கியது. ஆட்டத்தின் 22-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் நிகோ வில்லியம்ஸ் கோல் கணக்கை தொடங்கினாா்.
தொடா்ந்து மைக்கேல் மெரினோ 25-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, முதல் பாதியை ஸ்பெயின் 2-0 என முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியிலும் இளம் வீரா் லேமின் யமால் (54’), பெட்ரி (55’) ஆகியோா் கோலடிக்க, ஸ்பெயின் 4-0 என முன்னேறியது.
இந்நிலையில், சற்று வெகுண்டு எழுந்த பிரான்ஸுக்காக கிலியன் பாபே 59-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோல் கணக்கை தொடங்கினாா். அதற்கு பதிலடியாக லேமின் யமால் மீண்டும் கோலடிக்க ஸ்பெயின் 5-1 என முன்னேறியது.
79-ஆவது நிமிஷத்தில் ரயான் சொ்கி அடித்த கோலால் பிரான்ஸ் 2-5 என முன்னேற, 84-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் கோல் முயற்சியை ஸ்பெயின் வீரா் டேனி விவியன் தடுக்க முயல, அது ‘ஓன் கோல்’ ஆனது.
இதனால் பிரான்ஸ் கணக்கு 3-5 என அதிகரிக்க, எக்ஸ்ட்ரா டைமில் ராண்டல் கோலோ முவானி (90+3’) கோலடிக்க, பிரான்ஸ் 4-5 என நெருங்கியது. எனினும் எஞ்சிய நேரத்தில் பிரான்ஸுக்கு கூடுதல் கோல் வாய்ப்பை மறுத்த ஸ்பெயின், இறுதியில் 5-4 என வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயா்ன் மியுனிக்கை வீழ்த்தியது பிஎஸ்ஜி - அதிக கோல்கள் அடிக்கப்பட்ட அரையிறுதி

சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூா்

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

லீட்ஸிடம் வீழ்ந்தது மான்செஸ்டா் யுனைடெட்
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


