நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணியும் ஸ்பெயின் அணியும் மோதுகின்றன.
இந்த இரு அணிகளின் நட்சத்திர வீரர்களான ரொனால்டோவும் (40) லாமின் யமாலும் (17) மோதுகிறார்கள்.
ரொனால்டோ தனது முதல் போட்டியை 2003-இல் தொடங்கினார். லாமின் யமால் பிறந்ததே 2007-ஆம் ஆண்டுதான் என்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதன்முதலாக இறுதிப் போட்டியில் மோதும் இந்த இரு வீரர்களுக்காக உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
நேஷ்னல் லீக் அரையிறுதியில் ஸ்பெயினின் லாமின் யமால் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோவும் அரையிறுதியில் முக்கியமான நேரத்தில் கோல் அடித்து அசத்தினார்.
பார்சிலோனா ரசிகர்கள் லாமின் யமாலுக்கும் ரியல் மாட்ரிட் ரசிகர்கள் ரொனால்டோவுக்கும் ஆதரவு தெரிவிப்பதால் இந்தப் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி லைவில் இந்தப் போட்டியை நேரலையாகப் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருது வென்ற லாமின் யமால்!

பார்சிலோனாவை 20 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற அத்லெடிகோ: தோல்வியிலும் கவனம் ஈர்த்த லாமின் யமால்!

ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பது முக்கியம்..! யமாலுக்கு ஆதரவளித்த வினிசியஸ்!

நான் முஸ்லிம்தான், அல்ஹம்துலில்லாஹ்... ஸ்பெயின் ரசிகர்களின் இஸ்லாமிய வெறுப்புக்குப் பதிலளித்த லாமின் யமால்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


