
நேஷன்ஸ் லீக்: குரேஷியாவைப் (0-7) பந்தாடிய இங்கிலாந்து!
இங்கிலாந்து கால்பந்து அணியின் அபார வெற்றி குறித்து...

இங்கிலாந்து கால்பந்து அணி - படம்: ஏபி
நேஷன்ஸ் லீக் குரூப் சுற்றில் இங்கிலாந்து கால்பந்து அணி 7-0 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
கால்பந்து உலகில் கிளப் போட்டிகளுக்கு இடைவெளி விடுக்கப்பட்டு தேசிய அணிகளுக்கானப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஐரோப்பியாவின் மிகப்பெரிய கோப்பையான நேஷன்ஸ் லீக் போட்டிகள் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளன.
நேஷன்ஸ் லீக் குரூப் சி சுற்றில் இங்கிலாந்து - குரேஷியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 7-0 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ஹாரி கேன் (8’, 53’), புகாயோ சகா (45’, 68’) தலா இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்கள். ஜூட் பெல்லிங்கம் (21’), ஆண்டனி கோர்டான் (39’), மோர்கன் ரோகெர்ஸ் (87’) தலா ஒரு கோல் அடித்து அணியின் அபார வெற்றிக்கு உதவினார்கள்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 16 ஷாட்டுகளில் 9 முறை இலக்கை நோக்கி அடித்தது. மாறாக, குரேஷியா 10 ஷாட்டுகளில் ஒருமுறை மட்டுமே இலக்கை நோக்கி அடித்தது.
இங்கிலாந்து 709 பாஸ்களை 94 சதவிகித துல்லியத்துடன் செய்ய, குரேஷியா 323 பாஸ்களை 86 சதவிகித துல்லியத்துடன் செய்தது. இந்த வெற்றியுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் முன்னேறியுள்ளது.
குரூப் சி: புள்ளிப் பட்டியல்
1. ஸ்பெயின் - 9 புள்ளிகள்
2. இங்கிலாந்து - 6 புள்ளிகள்
3. குரேஷியா - 3 புள்ளிகள்
4. செக் குடியரசு - 0 புள்ளி
ð´ó §ó ¢ó ¥ó ®ó §ó ¿ England - 7
— ððððððððð (@emanonedits) October 4, 2026
ðð· Croatia - 0 pic.twitter.com/O0qoxjLRRh
Summary
நிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!Kane and Saka doubles helped England score superb seven without reply against woeful Croatia in Nations League
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






