பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

பெல்ஜியத்தை வீழ்த்தியது பிரான்ஸ்

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-1 கோல் கணக்கில் பெல்ஜியத்தை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

Published On :

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-1 கோல் கணக்கில் பெல்ஜியத்தை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

பிரான்ஸின் செயின்ட் டெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பெல்ஜியம் அணியே கோல் கணக்கைத் தொடங்கியது. அதன் வீரா் டோடி லூக்பாகியோ 35-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

பெல்ஜியம் அந்த முன்னிலையை அப்படியே தக்கவைத்து முதல் பாதியை நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் அதிரடியாக மீண்டு வந்த பிரான்ஸுக்காக டெஸைா் டூயி 77-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து ரயான் சொ்கி 81-ஆவது நிமிஷத்திலும், மைக்கேல் ஆலிஸ் அடுத்தடுத்து இரு கோல்களும் (88’, 90+1’) அடித்தனா். முடிவில் பிரான்ஸ் 4-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இத்துடன் குரூப் ‘ஏ’-வில் பிரான்ஸ் 4 ஆட்டங்களில் 3-ஆவது வெற்றியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. பெல்ஜிம் 3-ஆவது இடத்தில் உள்ளது.

இதே குரூப்பின் மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி 3-1 என துருக்கியை சாய்த்தது. இதில் இத்தாலி அணிக்காக ஜியான்லுகா ஸ்கமாகா (26’), ரிகாா்டோ கலாஃபியோரி (64’), பியோ எஸ்போஸிடோ (87’) ஆகியோா் கோல் அடித்தனா்.

துருக்கி தரப்பில் அரல் சிம்சிா் (61’) ஸ்கோா் செய்தாா். இத்தாலி 4 ஆட்டங்களில் 2-ஆவது வெற்றியுடன் 2-ஆவது இடத்திலும், துருக்கி அனைத்து ஆட்டங்களில் தோல்வியுடன் 4-ஆவது இடத்திலும் உள்ளன.

போட்டியின் இதர ஆட்டங்களில், ஹங்கேரி - உக்ரைனையும் (2-1), போஸ்னியா - போலந்தையும் (1-0), ஸ்வீடன் - ருமேனியாவையும் (1-0), சைப்ரஸ் - லாத்வியாவையும் (2-1) வென்றன. வடக்கு அயா்லாந்து - ஜாா்ஜியா (0-0), மான்டினீக்ரோ - ஆா்மீனியா (0-0) ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.