நேஷன்ஸ் லீக்: காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள்..! மற்ற 8 அணிகளின் நிலை என்ன?
நேஷன்ஸ் லீக் கால்பந்துத் தொடரில் காலிறுதிக்கு முன்னேறியுள்ள 8 அணிகள், குரூப் நிலைக்குத் தள்ளப்பட்ட அணிகள் குறித்து...

நார்வே, போர்ச்சுகல், ஜெர்மனி அணிகளின் கடைசி வெற்றிகள் - படங்கள்: எக்ஸ் / யுஇஎஃப்ஏ யூரோ
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் நேஷன்ஸ் லீக் 2026/27 சீசனுக்கான கால்பந்துத் தொடரில் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தப் போட்டிகள் மார்ச் மாதம் நடைபெற இருக்கின்றன.
பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய அணிகள் முதல் 8 அணிகளாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
வெற்றியாளர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?
மொத்தமாக 54 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் குரூப் ஏ, பி அணிகளில் இருக்கும் 32 அணிகளின் போட்டிகளே முக்கியமானதாக இருக்கின்றன. அதிலும் குரூப் ஏவில் இருக்கும் 16 அணிகளில் 8 அணிகள் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறுகின்றன.
மற்ற குரூப் பி அணிகள் அடுத்தாண்டு குரூப் ஏவில் பங்கேற்க தகுதிபெறுவதும் கீழிறங்குவதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏ குரூப்பில் இருக்கும் நான்கு துணைப் பிரிவுகளில் (ஏ1, ஏ2, ஏ3, ஏ4) இருந்து டாப் 2 அணிகள் காலிறுதிக்கு முன்னேறுகின்றன.
குரூப் ஏ1
பிரான்ஸ் - 13 புள்ளிகள் (காலிறுதிக்குத் தகுதி )
பெல்ஜியம் - 12 புள்ளிகள் (காலிறுதிக்குத் தகுதி)
இத்தாலி - 10 புள்ளிகள் (குரூப் ஏவில் நீடிக்கும்)
துருக்கி - 0 புள்ளி (குரூப் பி-க்கு கீழிறக்கம்)
குரூப் ஏ2
ஜெர்மனி - 11 புள்ளிகள் (காலிறுதிக்குத் தகுதி)
நெதர்லாந்து - 11 புள்ளிகள் (காலிறுதிக்குத் தகுதி)
கிரீஸ் - 11 புள்ளிகள் (குரூப் ஏவில் நீடிக்கும்)
செர்பியா - 0 புள்ளி (ஏ/பி பிளே ஆஃப்ஸ்)
குரூப் ஏ3
இங்கிலாந்து - 15 புள்ளிகள் (காலிறுதிக்குத் தகுதி)
ஸ்பெயின் - 15 புள்ளிகள் (காலிறுதிக்குத் தகுதி)
குரேஷியா - 6 புள்ளிகள் (ஏ/பி பிளே ஆஃப்ஸ்)
செக் குடியரசு - 0 புள்ளி (குரூப் பி-க்கு கீழிறக்கம்)
குரூப் ஏ4
போர்ச்சுகல் - 15 புள்ளிகள் (காலிறுதிக்குத் தகுதி)
நார்வே - 9 புள்ளிகள் (காலிறுதிக்குத் தகுதி)
டென்மார்க் - 9 புள்ளிகள் (ஏ/பி பிளே ஆஃப்ஸ்)
வேல்ஸ் - 3 புள்ளிகள் (ஏ/பி பிளே ஆஃப்ஸ்)
ஏ/பி பிளே ஆஃப்ஸ் என்பது இந்த அணிகள் குரூப் ஏவிற்கு முன்னேறுமா அல்லது குரூப் பி-க்கு கீழிறங்குமா என்பதை நிர்ணயிக்கும் போட்டிகளைக் குறிப்பிடும் என்பதும் நினைவுகூரத்தக்கது.
Portugal and Norway complete the quarter-finals â#NationsLeague pic.twitter.com/8qeIvSD7dF
— UEFA EURO (@UEFAEURO) November 17, 2026
Germany and Netherlands progress to the final eight â#NationsLeague pic.twitter.com/WU1rgqjOkY
— UEFA EURO (@UEFAEURO) November 16, 2026
Summary
UEFA Nations League quarter-finals: Last eight confirmed
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


