குரேஷிய வீரருக்கு ரெட் கார்டு: நேஷன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்!
உலக சாம்பியன் ஸ்பெயின் நேஷன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முன்னேறியது குறித்து...

குரேஷிய வீரருக்கு ரெட் கார்டு, கோல் அடித்த மகிழ்ச்சியில் ஸ்பெயின் வீரர்கள். - படங்கள்: ஏபி
உலக சாம்பியன் ஸ்பெயின் கால்பந்து அணி நேஷன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. நான்கு லீக் போட்டிகளிலும் வென்று அசத்தியுள்ளது.
குரேஷியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதியில் இடம்பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் குரேஷிய வீரருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் 17ஆவது நிமிஷத்தில் குரேஷிய வீரர் இவான் பெரிசிக் கோல் அடித்தார். முதல் பாதியில் இந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த ஸ்பெயின் அணியின் மைக்கல் மெரினோ 61, 88ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என வென்றது.
இந்தப் போட்டியில் குரேஷிய வீரர் இவான் பெரிசிக் 79ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இரண்டு யெல்லோ கார்டுகளைப் பெற்றதால் அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 67 சதவிகித நேரம் பந்தை தங்கம் வசம் வைத்திருந்தது. நான்கு போட்டிகளிலும் வென்று குரூப் சி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
குரூப் சி புள்ளிப் பட்டியல்
1. ஸ்பெயின் - 12 புள்ளிகள்
2. இங்கிலாந்து - 9 புள்ளிகள்
3. குரேஷியா - 3 புள்ளிகள்
4. செக் குடியரசு - 0 புள்ளி
Summary
Croatia vs Spain player ratings: Merino double helps Spain reach Nations League quarterfinals
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







