38 வயதில் ஆட்ட நாயகன் விருதுபெற்ற கோல்கீப்பர்: யார் இந்த ஆஸ்கர் உஸ்தாரி?

கிளப் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அசத்திய 38 வயது வீரர் குறித்து...
Inter Miami's goalkeeper Oscar Ustari won Man Of Tha Match in CWC 2025.
கோல்கீப்பர் ஆஸ்கர் உஸ்தாரி. படம்: ஃபிபா கிளப் உலகக் கோப்பை.
Published on
Updated on
1 min read

கிளப் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அசத்திய 38 வயது கோல்கீப்பர் ஆஸ்கர் உஸ்தாரி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இன்டர் மியாமி அணியும் அல்-அஹ்லி அணியும் முதல் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் போட்டியை முடித்தது.

இன்டர் மியாமி அணியின் கோல் கீப்பர் ஆஸ்கர் உஸ்தாரி பெனால்டி உள்பட 8 கோல்களை அசத்தலாக தடுத்து நிறுத்தினார்.

Inter Miami's goalkeeper Oscar Ustari saves a penalty during the Club World Cup group A soccer match between Al Ahly and Inter Miami in Miami
அட்டகாசமாக பந்தைத் தடுத்த ஆஸ்கர் உஸ்தாரி. படம்: ஏபி

57 சதவிகிதம் பந்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்த இன்டர் மியாமி அணி 266 பாஸ்களை செய்து அசத்தியது. மெஸ்ஸி அதிகபட்சமாக 7 கோல்கள் அடிக்க முறை முயற்சித்தார். எதிரணி கோல்கீப்பரும் அசத்தலாகச் செயல்பட்டார்.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஸ்கர் உஸ்தாரி தேர்வானார். ஆர்ஜெர்ன்டீன வீரரான இவருக்கு 38 வயதாகிறது.

கால்பந்து கிளப் பச்சுகா அணிக்காக 2020-23 ஆண்டுகளில் 123 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

நல்ல திறமை இருந்தும் அதை வெளிப்படுத்தாத வீரர் என இவரை வர்ணனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆர்ஜென்டீன அணிக்காக 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவர் இன்டர் மியாமி அணிக்காக செப்.2024இல் தேர்வானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com