கிளப் உலகக் கோப்பை: முதல் போட்டி டிரா!

கிளப் உலகக் கோப்பையின் முதல் போட்டி டிராவில் முடிந்தது குறித்து...
leo Messi at FIFA Club World Cup.
லியோனல் மெஸ்ஸி. படம்: ஃபிபா உலகக் கோப்பை
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் நடைபெற்ற முதல் கிளப் உலகக் கோப்பை போட்டி சமனில் முடிந்தது.

இன்டர் மியாமி அணியும் அல்-அஹ்லி அணியும் முதல் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் போட்டியை முடித்தது.

57 சதவிகிதம் பந்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்த இன்டர் மியாமி அணி 266 பாஸ்களை செய்து அசத்தியது. மெஸ்ஸி அதிகபட்சமாக கோல் அடிக்க 7 முறை முயற்சித்தார்.

அமெரிக்காவில் நடைபெறும் இந்த கிளப் உலகக் கோப்பையில் மொத்தம் 32 அணிகள் பங்குபெறுகின்றன.

ஏ,பி,சி,டி, என மொத்தம் 8 குரூப்புகளாக ஓவ்வொரு குரூப்பிலும் தலா 4 அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் குரூப் ஏ பிரிவில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி இருக்கிறது.

ரியல் மாட்ரிட் குரூப் ஹெச், மான்செஸ்டர் சிட்டி குரூப் ஜி, இண்டர் மிலம் குரூப் இ, சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிஎஸ்ஜி குரூப் பி-யிலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியைப் பார்க்க 60,927 மக்கள் திடலுக்கு வந்திருந்தனர். அமெரிக்காவின் 11 நகரங்களில் 12 திடல்களில் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

ரொனால்டோ இல்லாததால் இந்தப் போட்டி அவ்வளவுக்கு முக்கியத்துவம் இல்லையென அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com