
ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டியில் செர்ஜியோ ராமோஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
கிளப் உலகக் கோப்பையின் குரூப் இ பிரிவில் மான்டேரி ரயாடோஸ் அணியும் இன்டர் மிலன் அணியும் இந்திய நேரப்படி இன்று காலை மோதின.
இந்தப் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. போட்டியின் 25-ஆவது நிமிஷத்தில் கார்னர் கோல் கிக்கினை தனது பாணியிலான ஹெட்டரினால் (தலையால் பந்தினை அடித்தல்) ராமோஸ் கோல் அடித்தார்.
இன்டர் மிலன் அணியில் லாடரோ மார்டீனெஸ் 42-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார்
ராமோஸ் 2014ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் கடைசி நேரத்தில் கோல் அடித்து அசத்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் அதே மாதிரி கோல் அடித்து அசத்தியிருந்தார்.
39 வயதாகும் செர்ஜியோ ராமோஸ் சென்டர்-பேக் பொசிஷனில் விளையாடுவார். உலகின் மிகச் சிறந்த டிஃபென்டர் என ரசிகர்களும் வர்ணனையாளர்களும் புகழ்கிறார்கள்.
2010 உலகக் கோப்பை வென்ற ஸ்பானிஷ் அணியில் இருந்தவர். ரியல் மாட்ரிட் அணிக்காக 462 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
39 வயதில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ராமோஸ் போட்டியின் முடிவில் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.