
கிளப் உலகக் கோப்பையின் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி பெனால்டியை தவறவிட்டதால் போட்டி டிராவில் முடிந்தது.
தென்கிழக்கு அமெரிக்காவிலுள்ள ஹார்ட் ராக் திடலில் நடைபெற்ற குரூப் ’எச்’ பிரிவு போட்டியில் ரியல் மாட்ரிட் உடன் அல்-ஹிலால் மோதியது.
இந்தப் போட்டியின் முதல் பாதியிலேயே இரு அணிகளும் கோல் அடித்தது.
போட்டியின் 34ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக கான்சோலோ கார்சியாவும் 41ஆவது நிமிஷத்தில் அல்-ஹிலால் அணிக்காக ரூபன் நெவிஸ் பெனால்டியில் கோல் அடித்து அசத்தினார்.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. 52 சதவிகித பந்தினை ரியல் மாட்ரிட் தனது கட்டுக்குள் வைத்திருந்தது.
90 சதவிகித துல்லியத்துடன் பந்தினை பாஸ் செய்து அசத்திய ரியல் மாட்ரிட் இலக்கை நோக்கி 7 முறை கோல் அடிக்க முயற்சித்தது.
84 சதவிகித துல்லியத்துடன் பந்தினை பாஸ் செய்த அல்-ஹிலால் அணி இலக்கை நோக்கி 2 முறை மட்டுமே முயற்சித்தது.
கூடுதல் நேரம் 90+2ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட் அணியின் வால்வெர்டே தனக்கு கிடைத்த பெனால்டியை வீணடித்தார். அதனால் போட்டி 1-1 என சமனில் முடிந்தது.
ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக ஸபி அலோன்ஸோவிற்கு முதல் போட்டியே டிராவில் முடிந்தத ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
இளம் வீரர் கான்சோலோ கார்சியா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.