

சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட் அணி 6 - 1 என அபாரமாக வெற்றிப் பெற்றது.
இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ரியல் மாட்ரிட் அபார வெற்றி
சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட் அணி தனது சொந்த மண்ணில், மொனாகா அணியை எதிர்த்து விளையாடியது. இதில், ரியல் மாட்ரிட் அணி 6- 1 என அபாரமாக வெற்றிப் பெற்றது.
இந்தப் போட்டியில் எம்பாப்பே ( 5’, 26’), ஃபிராங்கோ மஸ்டாண்டுவோனோ (51'), திலோ (55’ - ஓன் கோல்) , வினிசியஸ் (63’), ஜூட் பெல்லிங்கம் (80’) கோல் அடித்தார்கள்.
மொனாகோ அணி சார்பில் 72-ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் மட்டுமே அடிகப்பட்டது.
இந்த வெற்றியின் மூலமாக சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட் அணி 15 புள்ளிகளுடன் இரண்டாமிடம் வகிக்கிறது.
ஆட்ட நாயகன் வினிசியஸ்
இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் 2 அசிஸ்ட்ஸ், 1 கோல் அடித்தார்.
இந்தச் சிறப்பான ஆட்டத்தினால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
கடைசி சில போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணியின் ரசிகர்கள் வினிசியஸ் ஜூனியரை களத்தில் கிண்டல் செய்து வந்தார்கள்.
இந்த நிலையில், வினிசியஸ் ஜூனியர் தன் மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முக்கியமான போட்டியில் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.