

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி அத்லெடிகோ மாட்ரிட் அணியை 2-1 என வீழ்த்தியது.
இதன்மூலம், இறுதிப் போட்டியில் பார்சிலோனாவுடன் ரியல் மாட்ரிட் மோதுகிறது.
சௌதி அரேபியாவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி அத்லெடிகோ மாட்ரிட் அணி மோதின.
இந்தப் போட்டியின் 2-ஆவது நிமிஷத்திலேயே ரியல் மாட்ரிட் அணியின் வல்வெர்டே ஃப்ரீ கிக்கில் அசத்தல் கோல் அடித்தார்.
ரோட்ரிகோ 55-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க 2-0 என ரியல் மாட்ரிட் முன்னிலை வகித்தது.
இதற்கடுத்து அத்லெடிகோ மாட்ரிட் 58-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்து 1-2 என தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் 51 சதவிகித பந்தினை தன்வசம் வைத்திருந்த அத்லெடிகோ மாட்ரிட் 6 முறை இலக்கை நோக்கி அடித்தும் பயனில்லாமல் சென்றது.
கடந்த செப்டம்பரில் அத்லெடிகோ லாலிகா தொடரில் ரியல் மாட்ரிட்டை 5-2 என வீழ்த்தி இருந்தார்கள். அதனால், இந்த வெற்றி ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
இறுதிப் போட்டி வரும் ஜன. 12ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
கடந்த முறை இதே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 5-2 என ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
அதனால், இந்தமுறை எல் - கிளாசிக்கோ போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.