

சாம்பியன்ஸ் லீக்கில் ஆர்செனல் அணி லீக் போட்டிகளில் அனைத்தையும் வென்ற முதல் அணியாக வரலாறு படைத்துள்ளது.
லீக் சுற்று முடிவில் ஆர்செனல் அணி 24 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நிறைவு செய்து அசத்தியது.
சாம்பியன்ஸ் லீக்கில் 36 அணிகளாக உயர்ந்ததால், லீக் சுற்றுப் போட்டிகளுக்கென புதிய வடிவம் கடந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 8 போட்டிகள் விளையாடும். அதில் டாப் 8-ல் வரும் அணிகள் நேரடியாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாக, 9-24ஆம் இடத்தில் வரும் அணிகள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்குத் தேர்வாகின்றன.
கடைசி 12 அணிகள் வெளியேற்றப்படுகின்றன. இந்த நிலையில், லீக் சுற்றில் 8 போட்டிகளிலும் வென்ற முதல் அணியாக ஆர்செனல் சாதனை படைத்துள்ளது.
100 சதவிகித வெற்றியுடன் ஆர்செனல் அணி அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.