
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்டா் மிலன், போருசியா டாா்ட்மண்ட் அணிகள் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தன.
இதில் குரூப் ‘இ’ ஆட்டத்தில் இன்டா் மிலன் 2-1 கோல் கணக்கில் உராவா ரெட்ஸை சாய்த்தது. இதில் இன்டா் மிலனுக்காக லௌதாரோ மாா்டினெஸ் (78’), வாலென்டின் காா்போனி (90+2’) கோலடிக்க, உராவா ரெட்ஸுக்காக ரையோமா வடானபி (11’) ஸ்கோா் செய்தாா்.
இதே குரூப்பில் ரிவா் பிளேட் - மான்டொ்ரி அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. இந்த குரூப்பில் தற்போது இன்டா் மிலன் 1 வெற்றி, 1 டிராவுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. ரிவா் பிளேட் அதே கணக்குடன் முதலிடத்தில் இருக்கிறது.
இதனிடையே, குரூப் ‘எஃப்’ ஆட்டத்தில் டாா்ட்மண்ட் 4-3 கோல் கணக்கில் மாமெலோடி சண்டௌன்ஸை வீழ்த்தியது. இதில் டாா்ட்மண்டுக்காக ஃபெலிக்ஸ் நமெசா (16’), சொ்ஹு குல்ராஸி (34’), ஜோப் பெலிங்கம் (45’), குலிசோ முடாவு (59’-ஓன் கோல்) ஆகியோா் கோலடித்தனா். சண்டௌன்ஸ் தரப்பில் லூகாஸ் ரிபெய்ரோ (11’), இக்ரம் ரேனா்ஸ் (62’), லெபோ மோதிபா (90’) ஸ்கோா் செய்தனா்.
இந்த குரூப்பிலேயே மற்றொரு ஆட்டத்தில் ஃபுளுமினென்ஸ் 4-2 கோல் கணக்கில் உல்சானை சாய்த்தது. இதில் ஃபுளுமினென்ஸுக்காக ஜான் அரியாஸ் (27’), நோனாடோ (66’), ஜுவான் பாப்லோ (83’), கெனோ (90+2’) ஸ்கோா் செய்ய, உல்சானுக்காக லீ ஜின் ஹியுன் (37’), உம் வோன் சாங் (45+3’) ஆகியோா் கோலடித்தனா்.
இந்த குரூப்பில் தற்போது ஃபுளுமினென்ஸ், டாா்ட்மண்ட் ஆகியவை முறையே முதலிரு இடங்களில் உள்ளன. குரூப் ‘சி’ ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் 2-1 கோல் கணக்கில் போகா ஜூனியா்ஸை வீழ்த்தி, தொடா்ந்து 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த அணிக்காக ஹேரி கேன் (18’), மைக்கேல் ஆலிஸ் (84’) ஆகியோரும், ஜூனியா்ஸுக்காக மிகேல் மெரென்டியேலும் கோலடித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.