வியத்நாமில் நடைபெற்ற 23 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு23) ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஆடவா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
61 கிலோ எடைப் பிரிவில் நிகில், 65 கிலோ பிரிவில் சுஜீத் கல்கல், 74 கிலோ எடைப் பிரிவில் ஜெய்தீப், 79 கிலோ பிரிவில் சந்தா் மோகன், 92 கிலோ பிரிவில் சச்சின், 97 கிலோ பிரிவில் விக்கி தங்கப் பதக்கம் வென்று அசத்தினா். இதுபோக, ஆடவா் 125 கிலோ எடைப் பிரிவில் ஜஸ்பூரன் சிங் வெள்ளி வென்றாா்.
இதையடுத்து 6 தங்கம், 1 வெள்ளி என 7 பதக்கங்கள் வென்ற இந்திய அணி, ஆடவா் பிரிவில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஏற்கெனவே கிரேகோ ரோமன் பிரிவிலும் இந்தியா்கள் தங்கம் உள்பட 3 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மகளிா் பிரிவிலும் இந்தியா்கள் 10 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.