
மெஸ்ஸி சிறுவயதில் விளையாடிய விளையாட்டு திடலுக்கு அவரது பெயரை சூட்டப்பட்டுள்ளது.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி 13-ஆவது வயது முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடினார். அதற்கு முன்புவரை அவரது சொந்த ஊரில் உள்ள நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் கிளப்பில் விளையாடினார்.
கடந்த 2021இல் பார்சிலோனாவிலிருந்து வெளியேறி பிஎஸ்ஜி அணியில் இணைந்தார்.
தற்போது, 2023 முதல் அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
இண்டர் மியாமி அணியில் இந்தாண்டுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைய இருக்கிறது.
இந்நிலையில், மெஸ்ஸியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிறுவயது கால்பந்து அணியான நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் விளையாட்டு திடலுக்கு அவரது பெயரை சூட்டியுள்ளார்கள்.
இந்தத் திடலின் மேற்பகுதியில் உள்ள அரங்கத்திற்கு முன்னாள் கால்பந்து இயக்குநர் மார்செலோ கால்டெரா பெயர் இருந்தது. தற்போது, அந்தப் பெயரை மாற்றி லியோனல் மெஸ்ஸி என மாற்றப்பட்டுள்ளது.
இன்டர் மியாமி ஒப்பந்தம் முடிந்ததும் மெஸ்ஸி தனது சிறுவயது அணிக்கே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் மெஸ்ஸி பங்கேற்பார். அதற்கான உடல்தகுதியுடனே கிளப் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
Summary
Newell's Old Boys new stand at their Coloso Marcelo Bielsa stadium has been named after Lionel Messi , announcing the decision on the day the inter miami forward turned 38 years old.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.