
மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
கிளப் உலகக் கோப்பையில் 3 போட்டிகளிலும் அசத்தலாக வென்று நாக் அவுட் சுற்றுக்கு மான்செஸ்டர் சிட்டி முன்னேறியிருக்கிறது.
நேற்று மாலை ஜுவெந்துஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 5-2 என மான்செஸ்டர் சிட்டி வென்றது. இந்தப் போட்டியில் 52-ஆவது நிமிஷத்தில் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்தார்.
இதன்மூலம், விரைவாக (370 போட்டிகளில்) 300 கோல்களை எட்டிய முதல்வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பாக மெஸ்ஸி 418 போட்டிகளிலும் ரொனால்டோ 554 போட்டிகளிலும் தங்களது 300 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டியிருந்தார்கள்.
சமீபத்தில் எர்லிங் ஹாலண்டுக்கு மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 2034 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
அதிவேகமாக 300 கோல்கள் அடித்தவர்கள்
1. எர்லிங் ஹாலண்ட் - 370 போட்டிகள்
2. கிளியன் எம்பாபே - 409 போட்டிகள்
3. லியோனல் மெஸ்ஸி - 418 போட்டிகள்
4. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 554 போட்டிகள்
யு-20 யில் விளையாடும்போது ஒரே போட்டியில் 9 கோல்கள் அடித்திருந்தார். சாம்பியன் லீக்கில் 49 போட்டிகளில் 48 கோல்கள் அடித்துள்ளார்.
According to recent statistical comparisons, Erling Haaland reached 300 goals in just 370 professional appearances. This pace surpasses the early-career scoring rates of other elite forwards, including Kylian Mbappé, Lionel Messi, and Cristiano Ronaldo.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.