

போலோக்னா அணி 51 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இத்தாலியன் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இத்தாலியில் உள்ள ஸ்டேடியோ ஒலிம்பிக்கோ திடலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஏசி மிலனை போலோக்னா அணி 1-0 என வீழ்த்தி கோப்பையை வென்றது.
டான் அசானே என்டோய் கடைசி 3 போட்டிகளில் விளையாடமல் இருந்தார். காயத்திலிருந்து மீண்டுவந்த இவர் இந்தப் போட்டியில் 53ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 1974-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக பொலோனியா அணி இத்தாலியன் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் 10 நிமிஷத்தில் இரண்டு அணியின் கோல் கீப்பர்களும் அசத்தலாக பந்தினை தடுத்தார்கள்.
முதல்பாதியின் கடைசியில் போலோக்னா அணியின் கேப்டனுக்கு மூக்குடைந்து ரத்தம் வழிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் ஏசி மிலன் பந்தினை 54 சதவிகிதம் தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் இலக்கை நோக்கி 2 முறை மட்டுமே கோல் அடிக்க முயற்சித்தது. அதையும் போலோக்னா அணி தடுத்துவிட்டது.
போலோக்னா அணி 5 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட பந்தில் 1 முறை சரியாக சென்று கோலாக மாறியது.
ஏசி மிலனின் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றும் கனவினை போலாக்னா அணி முறியடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.