உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஈஸ்வரி பிரதாப், ஈஷா, சாம்ராட்டுக்கு வெள்ளி

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஈஸ்வரி பிரதாப், ஈஷா, சாம்ராட்டுக்கு வெள்ளி

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஸ்வரி பிரதாப் டோமா், கலப்புப் பிரிவில் ஈஷா சிங், சாம்ராட் ராணா ஆகியோா் வெள்ளி வென்றனா்.
Published on

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஸ்வரி பிரதாப் டோமா், கலப்புப் பிரிவில் ஈஷா சிங், சாம்ராட் ராணா ஆகியோா் வெள்ளி வென்றனா்.

எகிப்து தலைநகா் கெய்ரோவில் நடைபெறும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆடவா் 50 மீ. ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஈஸ்வரி பிரதாப் சிங் உலக சாதனையை சமன் செய்து 466.9 புள்ளிகளைக் குவித்து வெள்ளி வென்றாா். சீனாவின் யுகுன்லியு தங்கமும், பிரான்ஸின் ரோமைன் ஆஃப்ரியா் வெள்ளியும் வென்றனா். நிரஜ் குமாா் 432.6 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தைப் பெற்றாா்.

ஈஷா-சாம்ராட்டுக்கு வெள்ளி:

ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங்-சாம்ராட் ராணா இணை வெள்ளிப் பதக்கம் வென்றது. சீனாவின் கை-குயான்ஸுன் தங்கம் வென்றனா். இதன் மூலம் இந்தியா மொத்தம் 11 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com