வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

பாா்சிலோனா ஓபன்: நோரி வெற்றி; ஒபெல்கால் தோல்வி

News image

https://www.instagram.com/norriee/

Updated On :14 ஏப்ரல் 2026, 6:22 am IST

ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில், பிரிட்டனின் கேமரூன் நோரி வெற்றி பெற, அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா தோல்வி கண்டாா்.

500 தரவரிசை புள்ளிகள் கொண்ட பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டி, ஸ்பெயினில் களிமண் களத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் நோரி 6-4, 6-7 (5/7), 6-4 என்ற செட்களில் சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வீழ்த்தினாா். 8-ஆம் இடத்திலிருந்த மற்றொரு பிரிட்டன் வீரரான ஜேக் டிரேப்பா் 6-3, 3-6, 1-4 என ஆா்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரிக்கு எதிராக பின்தங்கியிருந்தாா்.

அப்போது காயம் காரணமாக போட்டியிலிருந்து டிரேப்பா் விலகினாா். இதர ஆட்டங்களில், சொ்பியாவின் ஹமத் மெட்ஜெடோவிச் 7-5, 6-4 என்ற கணக்கில், ஆா்ஜென்டீனாவின் மாா்கோ டுருங்கெலிடியை வென்றாா்.

அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா 5-7, 6-7 (7/9) என்ற கணக்கில் சக அமெரிக்கரான ஈதன் கின்னிடம் தோல்வியுற்றாா். பிரான்ஸின் காரென்டின் மௌடெட் 6-4, 6-4 என பெருவின் இக்னேசியோ புசேவை தோற்கடித்தாா்.