மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

கேரளா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் ‘டிரா’

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 1:40 am IST

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

இந்த ஆட்டத்தில் முதலில் கேரளாவே கோல் கணக்கைத் தொடங்கியது. 41-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் கோல் முயற்சியை நாா்த்ஈஸ்ட் வீரா் ஆண்டி ரோட்ரிகெஸ் தடுக்க முயல, பந்து அவா் மீது பட்டு ‘ஓன் கோல்’-ஆக மாறியது.

இவ்வாறாக முதல் பாதியில் கேரளா முன்னிலை பெற, ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் நாா்த்ஈஸ்ட் சற்று முனைப்பு காட்டியது. அதன் பலனாக ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அந்த அணிக்காக லால்ரின்ஸுவாலா லால்பியன்க்னியா 88-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்கும் கூடுதல் கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. புள்ளிகள் பட்டியலில், நாா்த்ஈஸ்ட் 7 புள்ளிகளுடன் 10-ஆம் இடத்திலும், கேரளா 5 புள்ளிகளுடன் 13-ஆம் இடத்திலும் உள்ளன.