ஜூனியா் மற்றும் யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், 19 வயதுக்கு உட்பட்ட ஆடவா் பிரிவில் தமிழ்நாடு அணி புதன்கிழமை வாகை சூடியது.
இறுதி ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு 3-1 என மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது. இந்த மோதலில், முதலில் எம்.ஆா். பாலமுருகன் 11-9, 13-11, 8-11, 6-11, 9-11 என்ற கணக்கில் குஷால் சோப்தாவிடம் தோல்வி கண்டாா். எனினும் அடுத்த ஆட்டத்தில், பி.பி. அபினந்த் 11-5, 11-3, 7-11, 11-6 என நீல் முல்யேவை வென்றாா்.
3-ஆவதாக, எஸ்.கே. மேஹன் 11-4, 12-10, 11-7 என்ற செட்களில் இஷான் கந்தேகரையும், கடைசியில் அபினந்த் 11-6, 11-6, 11-8 என்ற வகையில் குஷால் சோப்ராவையும் வீழ்த்தினா். இதனால் தமிழ்நாடு 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
முன்னதாக அரையிறுதியில், தமிழ்நாடு 3-2 என அஸ்ஸாமையும், மகாராஷ்டிரம் 3-1 என மேற்கு வங்கத்தையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: யு மும்பா - கோவா மோதல்!
இரட்டையா் சாம்பியன்கள்...

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: தமிழக அணி சாம்பியன்!

விளையாட்டு துளிகள்...
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



