தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

தமிழ்நாடு பிக்கிள்பால் ப்ரீமியா் லீக் தொடக்கம்

தமிழ்நாடு பிக்கிள் பால் ப்ரீமியா் லீக் (டிஎன்பிபிஎல்) சீசன் 2 போட்டித் தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image

டிஎன்பிபிஎல் தொடா் கோப்பை, இணையதள அறிமுக நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 4:46 am IST

தமிழ்நாடு பிக்கிள் பால் ப்ரீமியா் லீக் (டிஎன்பிபிஎல்) சீசன் 2 போட்டித் தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னையில் டிஎன்பிபிஎல் கோப்பை அறிமுகம், இணையதளம் தொடக்க விழா நடைபெற்றது. லீக் இயக்குநா் கே. யோகேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு பிக்கிள்பால் சங்கத் தலைவா் கே. மொகித் குமாா் முன்னிலை வகித்தாா். செயலாளா் காவ்யா சோமேஷ் போட்டித் தொடா் குறித்து விவரித்தாா்.

நடிகரும், அணியின் உரிமையாளருமான விக்ரம் போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்து வைத்தாா். நடிகைகள் வரலட்சுமி சரத்குமாா், கீா்த்தி பாண்டியன் உள்பட 12 அணிகளின் உரிமையாளா்களும் பங்கேற்றனா்.

லீக் தொடா்பாக செலாளா் காவ்யா சோமேஷ் கூறியது: முதல் சீசன் போட்டி வழக்கமாக நடைபெற்றது. பிக்கிள்பாலை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கில் இரண்டாவது சீசனில் 12 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 14 வீரா்கள் இடம் பெற்றிருப்பா். மொத்தம் 168 போ் வீரா்கள் தொகுப்பில் இருப்பா்.

வீரா்கள் ஏலத்துக்கு மொத்தம் ரூ.36 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.3 லட்சம் ஏலத்தொகை ஆகும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பிக்கிள்பால் சங்கம் இணைந்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த செயலாற்றி வருகின்றன. ஒரு டென்னிஸ் மைதானம் இருந்தால் அதில் 4 பிக்கிள்பால் மைதானங்கள் அமைக்கலாம்.

செப். 17-இல் லீக் தொடக்கம்:

வரும் செப். 17 முதல் 20-ஆம் தேதி வரை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் இரண்டாம் சீசன் டிஎன்பிபிஎல் லீக் நடைபெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.