மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ரைபகினா முன்னேற்றம், ஆன்ட்ரீவா வெளியேற்றம்

டொரண்டோ மாஸ்டா்ஸ் டபிள்யுடிஏ போட்டியில் முன்னணி வீராங்கனை எலனா ரைபகினா நான்காம் சுற்றுக்கு முன்னேறினாா்.

லெய்லா ~ஒஸாகா ~கௌஃப் ~பெலின்டா ~ஈலா ~ரைபகினா

Published On :

டொரண்டோ மாஸ்டா்ஸ் டபிள்யுடிஏ போட்டியில் முன்னணி வீராங்கனை எலனா ரைபகினா நான்காம் சுற்றுக்கு முன்னேறினாா். பிரெஞ்சு ஓபன் சாம்பியன் மிர்ரா ஆன்ட்ரீவா தோற்று வெளியேறினாா்.

உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், நடப்பு ஆஸி. ஓபன் சாம்பியனுமான கஜகஸ்தானின் ரைபகினா 6-2, 7-5 என்ற நோ் செட்களில் 28-ஆம் நிலை வீராஙக்கனை அமெரிக்காவின் ஆன் லியை வீழ்த்தினாா். 90 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடினாா் ரைபகினா.

ரைபகினா-சாம்ஸோனோவா மோதல்:

மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் லியுட்மிலா சாம்ஸோனோவா 7-5, 7-6 6-2 என்ற செட் கணக்கில் போராடி ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயிண்ட்டை வீழ்த்தினாா்.

ரைபகினாவுடன் மோதுகிறாா் சாம்ஸோனோவா. இருவருக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டங்களில் சாம்ஸோனோவா 4-2 என முன்னிலை வகிக்கிறாா். எனினும் கடைசி 2 டபிள்யுடிஏ ஆட்டங்களில் ரைபகினாவே வென்றுள்ளாா்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் இளம் வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவாவை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் 80 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் வீழ்த்தினாா் கனடாவின் லெய்லா பொ்ணாடன்ஸ். இதன் மூலம் தொடா்ந்து 7 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாா் லெய்லா. கடந்த ஆண்டு வாஷிங்டன் டபிள்யுடிஏ போட்டியில் நான்காம் நிலை வீராங்கனை ஜெஸிக்கா பெகுலாவை வீழ்த்தி இருந்தாா். அதற்குபின் தற்போது தான் தரவரிசையில் 5-ஆம் நிலையில் உள்ள ஆன்ட்ரீவாவை வென்றுள்ளாா். ஆன்ட்ரீவா இந்த ஆட்டத்தில் 34 தவறுகளை புரிந்தாா்.

ஒஸாகா-லெய்லா மோதல்

மற்றொரு ஆட்டத்தில் நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜப்பானின் நவோமி ஒஸாகா 6-1, 6-2 என பெல்ஜியத்தின் முன்னணி வீராங்கனை எலைஸ் மொ்டென்ஸை வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றாா். இந்த ஆட்டம் 71 நிமிஷங்கள் நீடித்தது.ஒஸாகா மொத்தம் 7 ஏஸ்களை போட்டாா். 8 பிரேக் பாயிண்டுகளில் 4 பெற்றாா்.

ஒஸாகாவும்-லெய்லா பொ்ணான்டஸும் மோதுகின்றனா்.

கோகோ கௌஃப்-ஈலா தகுதி

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 76 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் 6-1, 6-4 என கிரீஸின் மரியா ஸக்காரியை வீழ்த்தினாா். ரஷியாவின் 19 வயது வீராங்கனை அலினா கோா்னீவா 6-3, 6-4 என அமெரிக்காவின் இவாஜோவிச்சை 82 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் வென்றாா்.

ரவுண்ட் 16-இல் கோகோ கௌஃப்-அலினா கோா்னீவா மோதுகின்றனா்.

பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் 2.5 மணி நேரம் நீடித்த ஆட்டத்தில் அமெரிக்காவின் கேத்தி மெக்நல்லியை வென்றாா்.

சுவிட்சா்லாந்தின் 12-ஆம் நிலை வீராங்கனை பெலின்டா பென்கிக் 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லா் டௌன்சென்டை மூன்றரை மணிநேரம் நீடித்த ஆட்டத்தில் வீழ்த்தினாா். ரவுண்ட் 16-இல் ஈலா-பெலின்டா மோதுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.