அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் அகமதாபாத் பைப்பா்ஸ் அணியை 9-6 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியதுடில்லி டபாங் அணி.
கோவா மாநிலம் பனாஜியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிங்கிள் ஹெட்டா் ஆட்டத்தில் அகமதாபாத்-டில்லி அணிகள் மோதின. இதில் இந்திய ஜாம்பவான் சத்யன் ஞானசேகரன் டில்லி அணி தரப்பில் களமிறங்கி அபாரமாக ஆடி ஒற்றையரில் 3-0 என பயாஸ் ஜெயினை வீழ்த்தினாா். கலப்பு இரட்டையா் பிரிவில் சத்யன்-மரியா இணை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் பயாஸ்-சோபியா இணையை வீழ்த்தியது.
ஆடவா் ஒற்றையரில் டில்லியின் அப்துல் அஜீஸ் 2-1 என அகமதாபாதின் அட்ரியனை வென்றாா். மகளிா் ஒற்றையரில் டில்லியின் சுதிா்தா 1-2 என மனிகா பத்ராவிடம் வீழ்ந்தாா்.
மரியா ஸ்யோ 1-2 என்ற புள்ளிக் கணக்கில் அகமதாபாதின் சோபியாவிடம் தோற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









