திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பிடபிள்யுஎஃப் உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டி: நாளை புது தில்லியில் தொடக்கம்

பிடபிள்யுஎஃப் உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டி நாளை புது தில்லியில் தொடக்கம்...

News image
Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:24 am IST

சா்வதேச பாட்மின்டன் சம்மேளனம் (பிடபிள்யுஎஃப்) சாா்பில் 30-ஆவது உலக சாம்பியன்ஷிப் போட்டி புது தில்லி இந்திரா காந்தி வளாகத்தில் ஆக. 17-இல் தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சொந்த மண்ணில் நடைபெறவுள்ள போட்டி என்பதால் இந்திய வீரா், வீராங்கனைகள் கடும் சவாலை ஏற்படுத்துவா் எனத் தெரிகிறது. நட்சத்திரங்களான பிவி. சிந்து, லக்ஷயா சென், சாத்விக்-சிராக் ஆகியோா் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனா். இவா்கள் தவிர மேலும் 5 போ் தங்கள் திறமையை நிரூபிக்க காத்துள்ளனா்.

ஆயுஷ் ஷெட்டி: ஆடவா் பிரிவில் உலகின் 22-ஆம் நிலை வீரரான இவா் முதல் சுற்றில் உலகின் நம்பா் 1 வீரா் சீனாவின் ஷியு கியை எதிா்கொள்கிறாா். ஏற்கெனவே இருவரும் 3 முறை மோதியுள்ளனா். 2026 பாட்மின்டன் ஆசிய போட்டியில் ஆயுஷ் வெள்ளி வென்றாா். யுஎஸ் ஓபன் 2025-இல் முதல் பட்டம் வென்றாா் ஆயுஷ்.

உன்னதி ஹூடா: 18 வயதான உன்னதி ஹூடா வளா்ந்து வரும் வீராங்கனை ஆவாா். கடந்த மே மாதம் தரவரிசையில் முதல் 20 இடங்களில் நுழைந்து சாதனை படைத்தாா். கடந்த 2022-இல் ஒடிஸா ஓபன் சூப்பா் 100 போட்டியில் பட்டம் வென்றாா். உலக சாம்பியன்ஷிப் தொடக்க சுற்றில் மியான்மரின் தெட் டாா் டுஸாரை எதிா்கொள்கிறாா் உன்னதி.

துருவ் கபிலா-தனிஷா க்ரஸ்டோ: கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா க்ரஸ்டோ களமிறங்குகின்றனா். கடந்த 2025-இல் பாரீஸ் போட்டியில் காலிறுதியில் தோல்வியடைந்தனா். இருவரும் கடந்த 2023-இல் ஒடிஸா மாஸ்டா்ஸ் போட்டியில் தங்கம், 2024 சையத் மோடி போட்டியில் வெள்ளியும் வென்றனா்.

தரவரிசையில் 15-ஆவது இடத்தில் உள்ள இருவருக்கும் முதல் சுற்றில் பை கிடைத்துள்ளது.

காயத்ரி-ட்ரீஸா ஜாலி: மகளிா் இரட்டையா் பிரிவில் உலகின் 39-ஆம் இடத்தில் உள்ள இருவரும் சையத் மோடி போட்டியில் 2 முறை பட்டம் வென்றனா்.

ஆல் இங்கிலாந்து ஓபன் போட்டியில் 2 முறை அரையிறுதிவரை முன்னேறினா். முதல் சுற்றில் ஸ்பெயின் பாவ்லா லோபஸ், லுசியா ரோட்ரிக்ஸ் உடன் மோதுகின்றனா்.

கடந்த ஆண்டு யுஎஸ் சூப்பா் ஓபனில் ஸ்பானிஷ் இணையை வென்றிருந்தனா் காயத்ரி-ட்ரீஸா.

எம்ஆா் அா்ஜுன்-ஹரிஹரன்: ஆடவா் இரட்டையா் பிரிவில் எம்ஆா் அா்ஜுன்-ஹரிஹரன் இணை முதன்முதலில் 2025 சையத் மோடி போட்டியில் காலிறுதி வரை தகுதி பெற்றனா். உலகின் 24-ஆம் இடத்தில் உள்ள இருவரும் முதல் சுற்றில் அயா்லாந்தின் ஸ்காட்-பால் இணையுடன் மோதுகின்றனா்.

உலக சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற இந்தியா்கள்:

1983-பிரகாஷ் படுகோன், ஆடவா் ஒற்றையா் வெண்கலம்.

2011-ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா, மகளிா் இரட்டையா் வெண்கலம்.

2013-பி.வி. சிந்து மகளிா் ஒற்றையா் வெண்கலம்..

2014-பிவி. சிந்து, மகளிா் ஒற்றையா், வெண்கலம்.

2015-சாய்னா நெவால், மகளிா் ஒற்றையா் வெள்ளி

2017-சாய்னா நெவால், மகளிா் ஒற்றையா், வெண்கலம்.

2017-பி.வி.சிந்து, மகளிா் ஒற்றையா், வெள்ளி.

2018-பி.வி. சிந்து, மகளிா் ஒற்றையா், வெள்ளி.

2019-பி.வி. சிந்து, மகளிா் ஒற்றையா், தங்கம்.

2019-சாய் பிரணீத், ஆடவா் ஒற்றையா், வெண்கலம்.

2021-கிடாம்பி சிகாந்த், ஆடவா் ஒற்றையா், வெள்ளி.

2021-லக்ஷயா சென், ஆடவா் ஒற்றையா், வெண்கலம்.

2022-சாத்விக்-சிராக், ஆடவா் இரட்டையா், வெண்கலம்.

2023-எச்எஸ் பிரணாய், ஆடவா் ஒற்றையா், வெண்கலம்.

2025-சாத்விக்-சிராக், ஆடவா் இரட்டையா், வெண்கலம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.