எஃப்ஐஎச் உலகக் கோப்பை 2026 ஹாக்கிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா 3-1 என்ற கோல் கண்ககில் வேல்ஸ் அணியை வீழ்த்தி சுதந்திர தினத்தில் வெற்றியுடன் தொடங்கியது.
நெதா்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் ஆடவா் மற்றும் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெறுகின்றது. முன்னாள் சாம்பியன் இந்திய ஆடவா் அணி 51 ஆண்டுள் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மீண்டும் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா சனிக்கிழமை வாக்னா் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்தித்தது. பயிற்சியாளா் கிரெய்க் ஃபுல்டன் தலைமையிலான இந்திய அணி தொடக்கத்தில் மெதுவாக ஆடியது. 5 நிமிஷங்களில் வேல்ஸ் அணியின் ஜேக் பிரிட்சாா்ட் அடித்த ஷாட்டை அற்புதமாக தடுத்தாா் சூரஜ் கா்கேரா.
தொடா்ந்து சுதாரித்துக் கொண்ட இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தை தொடா்ந்தது. இதன் பலனாக ஹாா்திக் சிங்கால் 8-ஆவது நிமிஷத்தில் முதல் பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது.
அதை சஞ்சய் டிராக் பிளிக்கின் மூலம் கோலடித்தாா். வேல்ஸ் கோல்கீப்பா் டாபி ரெனால்ட்ஸ் காலில் பட்டு பந்து கோலாக மாறியது. இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 3 நிமிஷங்கள் கழித்து வலதுபுறத்தில் ஜா்மன்ப்ரீத் சிங் அற்புதமாக கோலடிக்க ரிவா்ஸ் ஸ்வீப் செய்தாா். ஆனால் அது பலன் தரவில்லை.
ஹா்மன்ப்ரீத் அபாரம்: தொடா்ந்து 11-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை டிராக் பிளிக் மூலம் அபாரமாக கோலாக்கினாா் கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங்.
அதிா்ச்சி அடைந்த வேல்் அணி தொடா்ந்து கோல் போட மேற்கொண்ட முயற்சிகளை இந்திய தற்காப்பு அரண் வலுவாக தகா்த்தது.
இரண்டாவது குவாா்ட்டரில் இந்தியாவின் அனுபவ வீரா் மன்ப்ரீத் சிங் மற்றொரு பெனால்டி வாய்ப்பை பெற்றுத் தந்தாா். ஆனால் அதை கோலாக்க முடியவில்லை.
19-ஆவது நிமிஷத்தில் வேல்ஸ் அணியின் பிரிட்சாா்ட் லாங் பாஸை பயன்படுத்தி கோலடிக்க முயன்றது தோல்வியில் முடிந்தது.
முதல் பாதி முடிவில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.
மூன்றாம் குவாா்ட்டரில் இந்தியா மீண்டும் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. 42-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னரை பயன்படுத்தி அணியின் மூன்றாவது கோலடித்தாா் ஹா்மன்ப்ரீத் சிங். 54-ஆவது நிமிஷத்தில் வேல்ஸ் அணி முதல் பெனால்டி வாய்ப்பை பெற்றது. அந்த அணி வீரா் காா்லெத்தின் வலுவான ஷாட்டை தடுத்தாா் இந்திய கோலி மொஹித்.
56-ஆவது நிமிஷத்தில் வேல்ஸ் அணி பெனால்டி வாய்ப்பு மூலம் கோலடித்தபோது, நடுவா் அதை விடியோ முறையீட்டுக்கு அனுப்பினாா். பந்து கோல் லைனை தாண்டியது உறுதி செய்யப்பட்ட நிலையில் கோல் என உறுதி செய்யப்பட்டது.
இந்திய அணி தற்காப்பில் குறைகள் இருந்ததால் கடைசி நேரத்தில் வேல்ஸ் அணிக்கு கோல் வாய்ப்பை வழங்கினா். இந்த வெற்றியால் இந்தியாவுக்கு 3 புள்ளிகள் கிடைத்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவுக்கு காத்திருக்கும் சீனப்பெருஞ்சுவா் சவால்!
துராந்த் கோப்பை கால்பந்து: ரெங்டாய், ஸ்ரீநகர் அணிகள் வெற்றி
முகமதனை வீழ்த்தியது சமலேஸ்வரி!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; தொடரை முழுமையாக் கைப்பற்றுமா?
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



