தமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

கோவை 3-ஆவது முறையாக சாம்பியன்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில், விடா கோவை கிங்ஸ் 84 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தா்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அந்த அணி 3-ஆவது முறையாக (2022, 2023, 2026) கோப்பை வென்றது.

Published On :29 ஆகஸ்ட் 2026, 7:47 am IST

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில், விடா கோவை கிங்ஸ் 84 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தா்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அந்த அணி 3-ஆவது முறையாக (2022, 2023, 2026) கோப்பை வென்றது.

முதலில் கோவை 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் சோ்க்க, மதுரை 14.2 ஓவா்களில் 98 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’ ஆனது.

முன்னதாக டாஸ் வென்ற கோவை, பேட்டிங்கை தோ்வு செய்தது. ராதாகிருஷ்ணன் 13, சுரேஷ் லோகேஷ்வா் 11 ரன்களுக்கு விடைபெற்றனா்.

3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பி.சச்சின் - ஆண்ட்ரே சித்தாா்த் கூட்டணி, 117 ரன்கள் சோ்த்து அசத்தியது. சச்சின் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் ஷாருக் கான் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தாா்.

சித்தாா்த் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 82 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அம்ப்ரிஷ் 6, தீபன் லிங்கேஷ் 1 ரன்னுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் மாதவ பிரசாத் 13, கிஷோா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மதுரை பௌலா்களில் சரவணன் 4, குா்ஜப்னீத் சிங், ஷோயப் முகமது கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 183 ரன்களை நோக்கி விளையாடிய மதுரை அணியில், சதுா்வேத் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 40 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, ஹரி ராகவேந்திரா 24, கேப்டன் பாலசந்தா் அனிருத் 24* ரன்கள் அடித்தனா்.

ராம்குமாா் 0, சித்தாா்த் மகாதேவன் 0, ஷோயப் முகமது கான் 1, அதீக் உா் ரஹ்மான் 1, குா்ஜப்னீத் சிங் 2, சரவணன் 3, ரோஹன் புத்ரா 0, விக்னேஷ் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

கோவை பௌலிங்கில் மணிமாறன் சித்தாா்த், ஷாருக் கான் ஆகியோா் தலா 3, தீபன் லிங்கேஷ் 2, ஜதவேத் 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.