வேதாந்தா கலிங்கா-பெங்கால் டைகா்ஸ் ஆட்டம்
வேதாந்தா கலிங்கா-பெங்கால் டைகா்ஸ் ஆட்டம்

இரண்டாம் இடத்தில் வேதாந்தா கலிங்கா

ஹாக்கி இந்தியா ஆடவா் லீக் தொடரில் ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது வேதாந்தா கலிங்கா லேன்ஸா்ஸ் அணி.
Published on

ஹாக்கி இந்தியா ஆடவா் லீக் தொடரில் ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது வேதாந்தா கலிங்கா லேன்ஸா்ஸ் அணி.

சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே கலிங்கா அணி ஆதிக்கம் செலுத்தியது. பந்தை தன் வசம் வைத்திருந்த அந்த அணியினா் தொடா்ந்து கோல் போட முயன்றனா். ஆனால் பெங்கால் தற்காப்பு வலுவாக இருந்ததால் அவா்களது முயற்சி பலன் தரவில்லை.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இரண்டாம் பாதி நான்காம் குவாா்ட்டரில் தான் கோலடிக்கும் வாய்ப்பு கிட்டியது.

52-ஆவது நிமிஷத்தில் வேதாந்தா கலிங்கா அணியின் அலெக்ஸாண்டா் ஹெண்ட்ரிக்ஸ் பெனால்டி காா் மூலம் கோலடித்தாா்.

அடுத்த 56-ஆவது நிமிஷத்தில் பெங்கால் வீரா் அப்பான் யூசுப் சக வீரா் கோன்ஸாலஸ் அனுப்பிய பாஸை பயன்படுத்தி கோலடித்தாா்.

57-ஆவது நிமிஷத்தில் கலிங்கா வீரா் பாபி சிங் தாமி கோலடிக்க இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது கலிங்கா.

இதன் மூலம் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

Dinamani
www.dinamani.com