

சாம்பியன்ஸ் லீக்கின் கடைசி லீக் போட்டியில் பார்சிலோனா அணி 4-1 என அசத்தலாக வென்றது.
இந்த வெற்றியுடன் பார்சிலோனா அணி டாப் 8-ல் இடம்பிடித்து, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
கடைசி கட்ட லீக் போட்டியில் பார்சிலோனா தனது சொந்த திடலில் கோபன்ஹேகன் உடன் மோதியது.
இந்தப் போட்டியில் ஆட்டத்தின் நான்காவது நிமிஷத்திலேயே கோபன்ஹேகன் அணி கோல் அடித்தது. முதல் பாதி முடிவில் 0-1 என பார்சிலோனா அணி பின் தங்கியிருந்தது.
அடுத்ததாக, 48-ஆவது நிமிஷத்தில் லெவண்டாவ்ஸ்கி கோல் அடிக்க 1-1 என சமநிலைப் பெற, 60-ஆவது நிமிஷத்தில் லாமின் யமால் கோல் அடித்து 2-1 என முன்னிலைப் பெற்றது.
பெனால்டியில் ரபீனியா 69-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, 85-ஆவது நிமிஷத்தில் மார்கஸ் ரஸ்ஃபோர்டு ஃபிரீ கிக்கில் தனது ராக்கெட் வேக கோல் அடித்தார்.
இறுதியில் 4- 1 என பார்சிலோனா வென்றது. கடைசி நேரத்தில் கோபன்ஹேகன் கோல் அடித்தது விஏஆர் மூலம் ஆஃப் சைடாக கொடுக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலமாக பார்சிலோனா அணி டாப் 8-இல் இடம் பிடித்தது. ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்த லாமின் யமால் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
டாப் 8 - ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வான அணிகள்
1. ஆர்செனல் எஃப்சி
2. பெயர்ன் மியூனிக்
3. லிவர்பூல் எஃப்சி
4. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்
5. எஃப்சி பார்சிலோனா
6. செல்ஸி எஃப்சி
7. ஸ்போர்டிங் எஃப்சி
8. மான்செஸ்டர் சிட்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.