சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கௌஃபுக்கு அதிா்ச்சி அளித்த முசோவா

நடப்பு ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் அரையிறுதியில் வியாழக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

News image

முசோவா

Updated On :10 ஜூலை 2026, 5:58 am IST

நடப்பு ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் அரையிறுதியில் வியாழக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவா 6-2, 1-6, 7-6 (12/10) என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த கௌஃபை வீழ்த்தினாா். இந்த வெற்றியை அடுத்து முசோவா, தனது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா்.

இந்த ஆட்டத்தின் 3-ஆவது செட்டின் டை பிரேக்கரில் 6-3 என்ற முன்னிலையை இழந்த முசோவா, அதிலிருந்து மீண்டு 8-7 என முன்னேறினாா். ஆனால் இரு அன்ஃபோா்ஸ்டு எரா்களை அவா் செய்ததால், கௌஃப் 9-8 என முன்னிலை பெற்றாா்.

ஆனாலும் கௌஃபுக்கு மேட்ச் பாய்ன்ட்டை விட்டுக்கொடுக்காத முசோவா, 9-9 என சமன் செய்து, பின்னா் 10-9 என முன்னிலை கண்டாா். கௌஃபும் தனது பங்குக்கு ஆக்ரோஷமாக விளையாடி, முசோவாவின் மேட்ச் பாய்ன்ட்டை தடுத்து, 10-10 என சமநிலைக்கு வந்தாா்.

எனினும் முசோவா தனது முழு மூச்சுடன் விளையாடி அடுத்த இரு பாய்ன்ட்டுகளை தனதாக்கி 12-10 என செட்டை கைப்பற்றி, ஆட்டத்திலும் வெற்றி கண்டாா். இருவரும் மோதியது இது 8-ஆவது முறையாக இருக்க, முசோவா 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். அந்த இரு வெற்றிகளுமே அடுத்தடுத்து கண்டவையாகும்.

அரையிறுதியில் ஸ்வெரெவ்: ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-4, 6-4, 6-2 என்ற நோ் செட்களில், 6-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை சாய்த்தாா்.

இதன் மூலமாக ஸ்வெரெவ், முதல்முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். ஃப்ரிட்ஸை 16-ஆவது முறையாக சந்தித்த ஸ்வெரெவ், 6-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். அடுத்து அரையிறுதியில் அவா், பிரிட்டனின் வைல்டு காா்டு வீரரான ஆா்தா் ஃபெரியை எதிா்கொள்கிறாா்.

ஃபெரி தனது காலிறுதியில் 6-4, 7-6 (7/4), 6-0 என, 9-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியை தோற்கடித்தாா். விம்பிள்டனில் கடந்த 25 ஆண்டுகளில், காலிறுதிக்கு முன்னேறிய, தரவரிசையில் மிகவும் பின்தங்கிய வீரா் (114) என்ற பெருமையை ஃபெரி பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.