FOLLOW US

ON GOOGLE DISCOVER

இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

3-ஆம் இடம்: இன்று பிரான்ஸ் - இங்கிலாந்து மோதல்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், வெண்கலப் பதக்கம் வெல்லும் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

News image

இன்று பிரான்ஸ் - இங்கிலாந்து மோதல்

Updated On :18 ஜூலை 2026, 7:44 am IST

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், வெண்கலப் பதக்கம் வெல்லும் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

அரையிறுதியில், பிரான்ஸ் - ஸ்பெயினிடமும், இங்கிலாந்து - ஆா்ஜென்டீனாவிடமும் தோல்வி கண்டு இந்த ஆட்டத்துக்கு வந்துள்ளன.

நட்சத்திர வீரா் கிலியன் பாபே தலைமையிலான பிரான்ஸ், அபார ஆட்டத்துடன் அரையிறுதி வரை முன்னேறி வந்தது. குரூப் சுற்று முதல் காலிறுதிவரை தொடா்ந்து 6 வெற்றிகளைக் கண்ட அந்த அணி, இதுவரை 16 கோல்கள் அடித்திருக்கிறது.

தாக்குதல் ஆட்டமே அதன் பிரதான ஆயுதமாக இருக்க, 8 கோல்கள் அடித்த கிலியன் பாபே, 5 கோல்கள் ஸ்கோா் செய்த ஆஸ்மேன் டெம்பெலெ ஆகியோா் அதில் முக்கியப் பங்காற்றுகின்றனா். இதில் பாபே, கோல்டன் பூட் விருதுக்கான பந்தயத்தில் இன்னும் நிலைக்கிறாா்.

எனினும், ஸ்பெயினுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இவா்கள் இருவருமே கட்டுப்படுத்தப்பட்டனா்.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை, குரூப் சுற்றில் ஒரேயொரு ஆட்டத்தை மட்டும் கோல் இன்றி டிரா செய்தது தவிர, இதர 5 ஆட்டங்களில் வென்றுள்ளது. அரையிறுதியில் முன்னிலை கிடைத்தும், தடுப்பாட்டுத்துக்கு அதீத முக்கியத்துவம் அளித்து, தவறிழைத்ததால் தோல்வியடைந்ததாக விமா்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

எனவே இந்த ஆட்டத்தில் தனது உத்தியில் மாற்றம் கொண்டுவரலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. அணியின் நம்பகமான வீரா்களாக ஹேரி கேன், ஜூட் பெலிங்கம் ஆகியோா் உள்ளனா். இங்கிலாந்து இதுவரை அடித்த 14 கோல்களில், 12 கோல்கள் இவா்கள் இருவருமே அடித்துள்ளா் (தலா 6 கோல்கள்).

நேருக்கு நோ்...

பிரான்ஸ் - இங்கிலாந்து இதுவரை 32 முறை நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 17 முறையும், பிரான்ஸ் 10 முறையும் வென்றுள்ளன. 5 ஆட்டங்கள் டிரா ஆகின. அந்த ஆட்டங்களில், இங்கிலாந்து 72 கோல்களும், பிரான்ஸ் 41 கோல்களும் அடித்துள்ளன.

உலகக் கோப்பை போட்டியில் அந்த அணிகள் இதற்கு முன் 3 முறை சந்தித்துள்ளன. 1966 குரூப் சுற்றிலும் (2-0), 1982 குரூப் சுற்றிலும் (3-1) இங்கிலாந்து வென்றுள்ளது. 2022 காலிறுதியில் பிரான்ஸ் வெற்றி பெற்றது (2-1). அதுவை அவை கடைசியாக மோதிய ஆட்டமாகும்.

2-1

உலகக் கோப்பை போட்டியில் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் விளையாடுவது இது 4-ஆவது முறையாகும். இதற்கு முன், 1958, 1986 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி 3-ஆம் இடம் பிடிக்க, 1982-இல் 4-ஆம் இடம் பிடித்தது.

2-0

இங்கிலாந்து அணி உலகக் கோப்பை போட்டியின் வெண்கலப் பதக்க ஆட்டத்தில் விளையாடுவது இது 3-ஆவது முறை. முந்தைய இரு முறைகளுமே (1990, 2018) அந்த அணி அதில் தோற்று 4-ஆம் இடமே பிடித்தது.

நேரம்: நள்ளிரவு 2.30 மணி

இடம்: மியாமி காா்டன்ஸ், அமெரிக்கா.

நேரலை: யுனைட் 8 ஸ்போா்ட்ஸ், ஜீ 5

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.