முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!
/

உலகக் கோப்பை: 56 ஆண்டுகால பீலேவின் சாதனையை முறியடித்த ஒலிஸே!

கால்பந்து உலகக் கோப்பையில் பீலேவின் சாதனையை முறியடித்த பிரான்ஸ் வீரர் குறித்து...

News image

பிரான்ஸ் வீரர் மைக்கேல் ஒலிஸே. - படம்: ஏபி

Updated On :19 ஜூலை 2026, 9:58 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் 56 ஆண்டுகாலமாக இருந்த பீலேவின் சாதனையை பிரான்ஸ் வீரர் மைக்கேல் ஒலிஸே (24 வயது) முறியடித்துள்ளார்.

உலகக் கோப்பையின் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் பிரான்ஸை 6-4 என வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கல பதக்கம் வென்றது.

இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி தோற்றாலும் அதன் வீரர்கள் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள். எம்பாபே அதிக கோல் அடித்தவராக சாதனை படைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், இந்தப் போட்டியில் மைக்கேல் ஒலிஸே 48, 66ஆவது நிமிஷத்தில் 2 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தினார். இந்த 2 அசிஸ்ட்டுகளைச் செய்ததன் மூலமாக பீலேவின் 56 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பீலே 6 அசிஸ்ட்டுகளை செய்து முதலிடத்தில் இருந்தார். கடைசி போட்டியில் ஒலிஸே 2 அசிஸ்டுகளை அடித்து மொத்தமாக இந்த உலகக் கோப்பையில் மட்டுமே 7 அசிஸ்ட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

மெக்சிகோவில் 1970 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பீலே 6 அசிஸ்டுகளை செய்து சாதனை படைத்திருந்தார்.

Summary

Michael Olise Breaks 56-Year World Cup Assist Record at FIFA World Cup 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.