பொறியியல் கலந்தாய்வு எப்போது? தேதியை அறிவித்தார் அமைச்சர் விஸ்வநாதன்மாயமான காக்கிநாடா குழந்தை எங்கே? துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?
/

பீலே சாதனையை நெருங்கும் பிரான்ஸ் மிட்ஃபீல்டர்..! பேலந்தோர் விருது கிடைக்குமா?

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய சாதனையை படைக்கவிருக்கும் பிரான்ஸ் மிட்ஃபீல்டர் குறித்து...

News image

மைக்கேல் ஒலிஸே. - AFP

Updated On :1 ஜூலை 2026, 3:29 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக அசிஸ்ட்டுகளை செய்தவர்கள் பட்டியலில் பிரான்ஸ் மிட்ஃபீல்டர் மைக்கேல் ஒலிஸே (24 வயது) பல ஜாம்பவான்களை இன்று சமன்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பிரான்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்தப் போட்டியில் எம்பாபே 2 கோல்கள் அடித்தார். நட்சத்திர மிட்ஃபீல்டர் மைக்கேல் ஒலிஸே 2 அசிஸ்டுகளை செய்து அசத்தினர். இத்துடன் இந்த உலகக் கோப்பையில் 5 அசிஸ்ட்டுகளைச் செய்துள்ளார்.

ஒரு உலகக் கோப்பையில் அதிக அசிஸ்ட்ஸ் (6) செய்தவராக பிரேசிலின் முன்னாள் வீரர் பீலே முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் 5 அசிஸ்ட் செய்தவர்களுடன் ஐந்தாவது நபராக சமன்செய்துள்ளார்.

இன்னும் ஒரு அசிஸ்ட் செய்தால் பீலே சாதனையுடன் மைக்கேல் ஒலிஸே சமன்செய்வார். அதிக அசிஸ்ட் (8) செய்தவர்களில் லியோனல் மெஸ்ஸி, மாரடோனா உடன் சமன்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1. பீலே (பிரேசில்) – 1970ல் 6 அசிஸ்ட்ஸ்

2. ராபர்ட் கடோச்சா (போலந்து) – 1974ல் 5 அசிஸ்ட்ஸ்

2. தாமஸ் ஹாஸ்லர் (மேற்கு ஜெர்மனி) – 1994ல் 5 அசிஸ்ட்ஸ்

2. பியர் லிட்பார்ஸ்கி (மேற்கு ஜெர்மனி) – 1982ல் 5 அசிஸ்ட்ஸ்

2. டியாகோ மாரடோனா (ஆர்ஜென்டீனா) – 1986-இல் 5 அசிஸ்ட்ஸ்

2. மைக்கேல் ஒலிஸ் (பிரான்ஸ்) – 2026-ல் 5 அசிஸ்ட்ஸ்

இங்கிலாந்தில் பிறந்த மைக்கேல் ஒலிஸே பிரான்ஸ் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். கிளப்பில் பெயர்ன் மியூனிக் அணியில் விளையாடி வருகிறார்.

கடந்த முறை பேலந்தோர் விருதை பிரான்ஸின் டெம்பேலே வென்று அசத்தினார். தற்போது, இந்த விருதுக்கு அதே நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஒலிஸேவும் போட்டியிடுகிறார்.

இந்த சீசனில் மைக்கேல் ஒலிஸே 27 கோல்கள், 37 அசிஸ்ட்ஸ் செய்து மிரட்டியுள்ளது கவனிக்கத்தக்கது. எம்பாபே, டெம்பேலேவை விட பேலந்தோர் விருதுக்குத் தகுதியானவராக மைக்கேல் ஒலிஸே மாறிவருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Most assists, Michael Olise On Verge Of FIFA World Cup History to Pele After Sweden Masterclass, he will win the ballon dor

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.